மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஜூலை 2018

பிறந்த நாள் தேதி மாற்றம்: புதிய நிபந்தனை!

பிறந்த நாள் தேதி மாற்றம்: புதிய நிபந்தனை!

அரசுப் பணிகளில் சேருவோர் பிறந்த நாள் தேதியை மாற்றுவது தொடர்பான கோரிக்கையை விடுத்தால் அதற்கான நடைமுறைகள் குறித்த புதிய உத்தரவைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக, தமிழகத்தின் அனைத்து அரசுத் துறை செயலாளர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுக்குத் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அண்மையில் கடிதம் அனுப்பியிருந்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

பிறந்த தேதியை மாற்றுவது தொடர்பாக அரசு ஊழியர் வைத்துள்ள கோரிக்கை குறித்துக் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த வழக்கு ஒன்றில் உயர் நீதிமன்றம் சில கருத்துகளைத் தெரிவித்திருந்தது.

அதில், பிறந்த நாள் தேதி மாற்றம் செய்ய வேண்டும் என்று யாராவது அரசுக்குக் கோரிக்கை விடுத்தால், அவர் 10ஆம் வகுப்பு தேர்வை எழுதும்போது 15 வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்ற தகுதியை அளவு கோலாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

அந்த வயது தகுதியை அவர் திருப்தி செய்யவில்லை என்றால், அவருக்கு அளிக்கப்பட்ட பணி உத்தரவை ரத்து செய்துவிட்டு அனுப்பி விடலாம். இதனால் இதுபோன்ற கோரிக்கைகள் அரசுக்கு அடிக்கடி வருவதைத் தவிர்க்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

வருவாய் பற்றாக்குறை மானியம்: தமிழகத்துக்கு ரூ.183.67 கோடி!

2 நிமிட வாசிப்பு

வருவாய் பற்றாக்குறை மானியம்: தமிழகத்துக்கு ரூ.183.67 கோடி!

வேலைவாய்ப்பு : எஸ்.பி.ஐ வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : எஸ்.பி.ஐ வங்கியில் பணி!

கூடுதல் கட்டணம் : யாரிடம் புகார் அளிக்க வேண்டும்?

4 நிமிட வாசிப்பு

கூடுதல் கட்டணம் : யாரிடம் புகார் அளிக்க வேண்டும்?

ஞாயிறு 29 ஜூலை 2018