மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஜூலை 2018

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

நம்ம உடைகளுக்கும் நீருக்கும் என்ன சம்பந்தம்?

நாம குடிப்பதற்கு, குளிப்பதற்கு, விளையாடுவதற்குன்னு எவ்வளவு நீரை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஆனால், அவற்றில் பிளாஸ்டிக் குப்பைகளைப் போடுவது, சோப்பு, ஷாம்பு, பவுடர் போன்ற கெமிக்கல்களைக் கலப்பது, வீட்டின் கழிவுகளை நீரில் கலந்து சாக்கடையாக்குவது என்று அவற்றை மாசுபடுத்துவது முற்றிலும் தவறு.

நீர் மேலாண்மை என்பது என்ன? நீரைப் பயன்படுத்தாமல் பாதுகாப்பதல்ல. பயன்படுத்துவதற்காக நீரைச் சேமிப்பது.

நீங்க பயன்படுத்தின நீரை மீண்டும் எத்தனை முறை வேணும்னாலும் பயன்படுத்தலாம். ஆனால், மாசுபடுத்திய நீரை ஒருமுறைகூடப் பயன்படுத்த முடியாது. நீங்க அப்படி மாசுபடுத்துவதனால் உங்களுக்குக் கிடைக்க வேண்டிய நீர்தான் பாதிப்படையுது. அதை மறந்துடாதீங்க.

முடிந்தவரை மறு உபயோகம் செய்யுங்கள். புதுத் துணிகள் வாங்குவது, புதுப் பைகள் வாங்குவது என்பதை எல்லாம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைச்சிடுங்க.

துணிகள், பைகள் வாங்குவதற்கும் நீர் மாசடைவதற்கும் என்ன சம்பந்தம்னு யோசிக்கிறீங்களா? நீங்க போடுற கலர் துணிகளுக்குச் சாயம் போடத்தான் நொய்யல் என்கிற ஆற்றையே அழிச்சாங்க. இன்னிக்கு நொய்யல் முழுக்க நுரை தள்ளி உயிருக்குப் போராடிட்டிருக்கு. ஒரு லெதர் பேக் செய்ய, நீங்க கட்டுற வாட்சுல இருக்க லெதர் ஸ்டிராப் (Leather strap) செய்ய பல கேலன்கள் நீர் மாசுபடுத்தப்படுது.

இந்த மாசுபாடுகள்ல நாம நேரடியா இறங்கவில்லைனாலும், இந்தப் பொருட்களை வாங்குவதன் மூலமா நாமதான் அந்த மாசுபாடுகளுக்கான முக்கியமான காரணமா இருக்கோம். நமக்காகத்தான் அந்தப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுது. எல்லா விழாக்களுக்கும் புதுத் துணிகள் எடுப்பது, புதுப் பொருட்கள் வாங்குவது என்பதையெல்லாம் முடிந்தவரை தவிர்த்திடுங்க.

இன்னிக்கு நிலைமையில, நீரை மாசுபடுத்தாம ஒரு பொருளைக்கூட நவீன தொழில்நுட்பம் உற்பத்தி செய்யறதில்லை. கதர் ஆடைகள், துணிப் பைகள் வாங்கி பயன்படுத்த ஆரம்பிச்சிடுங்க. இவை நீர் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துறதோட மட்டுமில்லாம, இந்த மாதிரி இயற்கையைச் சிதைக்காத தொழில் செய்யறவங்களுக்கும் மிகுந்த நம்பிக்கையையும் வருமானத்தையும் கொடுக்கும்.

- நரேஷ்

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

3 நிமிட வாசிப்பு

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

4 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

ஞாயிறு 29 ஜூலை 2018