மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஜூலை 2018

பாரம்பரிய உணவுக்கு மாறுங்கள்!

பாரம்பரிய உணவுக்கு மாறுங்கள்!

நாம் பீட்சா, பர்கர் போன்ற ஜங்க் உணவு வகைகளைத் தேடிச் செல்கிறோம், அதை விட்டுவிட்டுப் பாரம்பரிய உணவுக்கு மாற வேண்டும் என்று துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவும், திமுக தலைவர் கருணாநிதியை உடல்நலம் விசாரிக்கவும் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், துணை முதல்வர் பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

அதைத் தொடர்ந்து சென்னை தரமணியில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம் ஏற்பாடு செய்திருந்த ஊட்டச்சத்து தொடர்பான விழாவில் கலந்துகொண்டு பேசிய துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, “உலகில் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை கடந்த பத்து ஆண்டுகளில் உயர்ந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஊட்டச்சத்து குறைபாடு நாட்டின் மிக முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக இருந்துவருகிறது. மத்திய மாநில அரசுகள் ஊட்டச்சத்து குறைபாட்டுப் பிரச்சினைக்குக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நமக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களை வீட்டிலேயே வளர்க்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

“விவசாயம்தான் நமது பாரம்பரியம். நமது உணவு பழக்கத்தை முன்னோர்கள் விட்டுச் சென்றனர். மஞ்சூரியன், பல்கேரியன் வகை உணவுகளால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. நாம் பீட்சா, பர்கர் போன்ற ஜங்க் உணவைத் தேடிச் செல்கிறோம். இதை மாற்ற வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

3 நிமிட வாசிப்பு

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

4 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

ஞாயிறு 29 ஜூலை 2018