மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஜூலை 2018

முந்திரி விலை சரிவு!

முந்திரி விலை சரிவு!

சர்வதேச சந்தையில் முந்திரி விலை சரிவடைந்துள்ளதால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச சந்தையில் முந்திரி விலை சரிவடைந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் சுமார் 20 விழுக்காடு வரையில் சர்வதேச சந்தையில் விலை சரிவடைந்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் பவுண்ட் ஒன்றுக்கு (0.453592 கிலோ கிராம்) சுமார் 323.82 ரூபாய் முதல் 340.86 ரூபாய் வரையில் இருந்தது. ஆனால் இப்போது பவுண்ட் ஒன்றுக்கு 255.65 ரூபாய் முதல் 289.73 ரூபாயாகச் சரிந்துள்ளது.

மே மாதத்தில் அதிகபட்சமாக டன் ஒன்றுக்கு சுமார் 1,36,000 ரூபாய்க்கு விற்பனையான முந்திரி ஜூன் மாத இறுதியில் 1,22,000 ரூபாயாகக் குறைந்துவிட்டது. சர்வதேச விற்பனையைப் பொறுத்தவரையில் பிப்ரவரி முதல் ஏப்ரல் வரையிலான காலத்தில் இருப்பில் இருந்த முந்திரியை வர்த்தகர்கள் மிகக் குறைவான விலைக்குக் கேட்டதே விலை சரிவுக்குக் காரணமாக உள்ளது.

வருவாய் பற்றாக்குறை மானியம்: தமிழகத்துக்கு ரூ.183.67 கோடி!

2 நிமிட வாசிப்பு

வருவாய் பற்றாக்குறை மானியம்: தமிழகத்துக்கு ரூ.183.67 கோடி!

வேலைவாய்ப்பு : எஸ்.பி.ஐ வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : எஸ்.பி.ஐ வங்கியில் பணி!

கூடுதல் கட்டணம் : யாரிடம் புகார் அளிக்க வேண்டும்?

4 நிமிட வாசிப்பு

கூடுதல் கட்டணம் : யாரிடம் புகார் அளிக்க வேண்டும்?

ஞாயிறு 29 ஜூலை 2018