மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஜூலை 2018

மருந்து கடைகளின் மீது 953 வழக்குகள்!

மருந்து கடைகளின் மீது 953 வழக்குகள்!

மருந்து தயாரிப்பு, விற்பனை ஆகியவை தொடர்பான விதிமுறைகளை மீறியதற்காக தமிழகம் முழுவதும் உள்ள மருந்து தயாரிப்பாளர்கள், மொத்த மருந்து விற்பனையாளர்கள் மற்றும் மருந்து கடைகள் ஆகியவற்றின் மீது 953 வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகத் தமிழக மருந்து கட்டுபாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக மருந்து கட்டுபாட்டு ஆணையத்தின் இயக்குநர் கே.சிவபாலன் நேற்று (28.07.18) பத்திரிகையாளர்களிடம் பேசியபோது, கூறியதாவது:

இதுவரை கடந்த இரண்டாண்டுகளில் மருந்துகளின் தரங்கள், தயாரிப்பு, விற்பனை ஆகியவை தொடர்பாக உள்ள விதிமுறைகளை மீறியதற்காக 900 நிறுவனங்கள் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவற்றில் மருந்து கடைகள்,மொத்த விற்பனையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் ஆகியோரும் அடங்குவர். கடந்த 2016 ஏப்ரல்1இல் இருந்து 2017 மார்ச் 31 வரை 471 வழக்குகளும்,2017 ஏப்ரல் 1இல் இருந்து 2018 மார்ச் 31 வரை 482 வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் மருந்துகள் மற்றும் முகப்பூச்சுகள் சட்டம் 1940இன் கீழும் மருந்து விலை கட்டுபாடு ஆணை 2013 இன் கீழும் தொடரப்பட்டுள்ளன.

2016-17இல் மருந்து கடைகள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் மீது 370 வழக்குகளும் 2017-18இல் 369 வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. மருத்துவரின் மருந்து பரிந்துரைச்சீட்டு இன்றி மருந்து விற்பனை, மருந்தாளுநர் கண்காணிப்பின்றி மருந்து கடைகள் நடத்துதல். மருத்துவரின் பரிந்துரை சீட்டுகளைப் பராமரிக்கும் ஆவணங்கள் இன்றி மருந்து கடை நடத்துதல் தரமற்ற மருந்துகள் மற்றும் காலாவதியான மருந்துகளை வைத்திருத்தல் போன்ற விதிமுறை மீறல்களுக்காக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

3 நிமிட வாசிப்பு

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

4 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

ஞாயிறு 29 ஜூலை 2018