மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஜூலை 2018

ஸ்டெர்லைட் ஆலை: நிர்வாகம் சொல்வது உண்மையா?

ஸ்டெர்லைட் ஆலை: நிர்வாகம் சொல்வது உண்மையா?

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மாசுபட்டிருப்பதால், நிலத்தடி நீர் குடிப்பதற்கு உகந்தது அல்ல என்று மத்திய அரசு தெரிவித்த கருத்தை ஆலை நிர்வாகம் மறுத்துள்ளது.

தூத்துக்குடி மக்கள் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகக் கூறி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்ததை அடுத்து, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

"தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் மத்திய நிலத்தடி நீர் வாரியம் நடத்திய ஆய்வில், மத்திய தரக்கட்டுப்பாடு ஆணையம் அங்கீகரித்த அளவைவிட நிலத்தடி நீரில் அதிக உலோகங்கள் இருந்துள்ளது தெரியவந்தது. லெட், கேட்மியம், குரோமியம், மாங்கனீசு, இரும்பு மற்றும் அர்செனிக் ஆகிய கனிமங்களும் நீரில் அதிக அளவில் உள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ள பகுதியில் நிலத்தடி நீரில் அதிக அளவில் உலோகங்கள் கலந்திருப்பதால், அவை குடிப்பதற்கு உகந்தது அல்ல" என்று மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேஹ்வால் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக, ஸ்டெர்லைட் ஆலை விளக்கம் அளித்துள்ளது. அதில், "ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள எட்டு கிராமங்களில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் 1996ஆம் ஆண்டு முதல் தொடர் ஆய்வு நடத்தி வருகிறது. அதில், நாடாளுமன்றத்தில் மத்திய அரசு குறிப்பிட்டபடி ஆர்செனிக் வேதிப்பொருள் காணப்படவில்லை.

மத்திய அரசு அளித்த விவரத்தில் ஆர்செனிக்கை தவிர்த்த மற்ற வேதிப்பொருள் எதுவும் ஸ்டெர்லைட் ஆலையுடன் தொடர்புடையவை அல்ல. விதிகளுக்கு உட்பட்டு நீரைச் சுத்திகரிப்பதால், நிலத்தடி நீர் மாசுபடுவதற்கு வாய்ப்பே இல்லை. தமிழகத்தில் உள்ள பல இடங்களில் நிலத்தடி நீர் இயற்கையிலே மாசுபட்டிருக்கிறது" எனத் தெரிவித்துள்ளது.

வருவாய் பற்றாக்குறை மானியம்: தமிழகத்துக்கு ரூ.183.67 கோடி!

2 நிமிட வாசிப்பு

வருவாய் பற்றாக்குறை மானியம்: தமிழகத்துக்கு ரூ.183.67 கோடி!

வேலைவாய்ப்பு : எஸ்.பி.ஐ வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : எஸ்.பி.ஐ வங்கியில் பணி!

கூடுதல் கட்டணம் : யாரிடம் புகார் அளிக்க வேண்டும்?

4 நிமிட வாசிப்பு

கூடுதல் கட்டணம் : யாரிடம் புகார் அளிக்க வேண்டும்?

ஞாயிறு 29 ஜூலை 2018