மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஜூலை 2018

'முத்தமழை’ புகைப்படம் எடுத்தவருக்கு அடி உதை!

'முத்தமழை’ புகைப்படம் எடுத்தவருக்கு அடி உதை!

கொட்டும் மழைச் சாரலில் காதலர்கள் முத்தமழை பொழிந்ததைப் புகைப்படம் எடுத்தவருக்கு அடி உதை விழுந்துள்ளது.

வங்கதேசத்தைச் சேர்ந்தவர் ஜிபான் அகமது. இவர் புகைப்படக் கலைஞர். கேமரா பிரியர் என்றே கூறலாம்.

இந்த நிலையில், ஜிபான் அகமது தனது முகநூலில் 'ஆசிர்வதிக்கப்பட்ட மழையின் கவிதை இது' எனத் தலைப்பிட்ட (கேப்ஷன்) புகைப்படம் ஒன்றைப் பதிவேற்றம் செய்திருந்தார்.

அந்தப் புகைப்படத்தில் காதல் ஜோடி ஒன்று கொட்டும் சாரல் மழையில் டீக்கடையின் பின்புறத்தில் அமர்ந்தவாறு உதட்டோடு உதடாக (பிரென்சு கிஸ்) முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

இந்தப் புகைப்படம் டாக்கா பல்கலைக்கழக வளாகத்தின் பின்புறம் எடுக்கப்பட்ட புகைப்படமாகும். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு, பல்வேறு விமர்சனங்களையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தி உள்ளது.

இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் எதிர்ப்புகளும், வன்முறைகளும் வெடித்து வருகின்றன. இந்த நிலையில், பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர்கள் ஜிபான் அகமதுவை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

மேலும், ஜிபானுக்கு உதவிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

3 நிமிட வாசிப்பு

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

4 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

ஞாயிறு 29 ஜூலை 2018