மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஜூலை 2018

ரயில்களில் தானியங்கி கதவுகள்?

ரயில்களில் தானியங்கி கதவுகள்?

புறநகர் மற்றும் மின்சார ரயில்களில் தானியங்கி கதவுகள் அமைத்தால் தொழில்நுட்பச் சிக்கல்களும் காற்றோட்ட வசதியின்றி பொதுமக்களுக்குப் பாதிப்பும் நேரும் என்பதால், அந்தக் கதவுகள் அமைக்கும் திட்டம் இல்லை என ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை கொருக்குப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் ரயில் நிலையம் வரை புதியதாக அமைக்கப்பட்ட நான்காம் இருப்புப்பாதை பணிகள் நிறைவு பெற்றுள்ளது. அதனை ஆய்வு செய்த ரயில்வே பாதுகாப்பு ஆணையர், பரங்கிமலை விபத்து குறித்து 20 நாட்களில் முதற்கட்ட அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று கூறினார்.

மேலும் பேசிய ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன், "பரங்கிமலை ரயில் நடைமேடைகளின் அமைப்பு மாறுபாடுகளால் பாதுகாப்பு குறைவு குறித்து ரயில் ஓட்டுநருக்குத் தெரியும். ஆனால், மக்கள் விரைவாகப் போய்ச் சேர வேண்டும் என்பதற்காக மாற்றுப் பாதையில் ரயில் இயக்கப்பட்டது. பரங்கிமலை ரயில் விபத்து தொடர்பாக நாளை நடைபெறும் விசாரணைக்குப் பின் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், புறநகர் மற்றும் மின்சார ரயில்களில் தானியங்கி கதவுகள் அமைத்தால் தொழில்நுட்பச் சிக்கல்களும், காற்றோட்ட வசதியின்றி பொதுமக்களுக்குப் பாதிப்பும் நேரும். அதனால் ரயில்களில் தானியங்கி கதவுகள் அமைக்கும் திட்டம் இல்லை" எனத் தெரிவித்தார்.

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

3 நிமிட வாசிப்பு

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

4 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

ஞாயிறு 29 ஜூலை 2018