மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஜூலை 2018

பூத் வாரியாகக் கட்சியைப் பலப்படுத்தும் காங்கிரஸ்!

பூத் வாரியாகக் கட்சியைப் பலப்படுத்தும் காங்கிரஸ்!

நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் வகையில் கர்நாடக காங்கிரஸ் சார்பில் சக்தி செயலி வெளியிடப்பட்டுள்ளது.

மக்களவைக்கான தேர்தல் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தொடங்கிவிட்டன. இந்த நிலையில், பூத் வாரியாக தொண்டர்களைப் பலப்படுத்துவதற்காக கர்நாடக காங்கிரஸ் சார்பில் சக்தி செயலி நேற்று (ஜூலை 28) வெளியிடப்பட்டுள்ளது.

தொண்டர்களுக்கும் தலைவர்களுக்கும் இணைப்பை ஏற்படுத்தும் முயற்சியாக இந்தச் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

செயலியை அறிமுகப்படுத்திய பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ப.சிதம்பரம், “காங்கிரஸ் சீராக வளர்ந்து வருகிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் பலமாக உள்ளது. கர்நாடகச் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 38 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. இது, பாஜகவை விட 2 சதவிகிதம் அதிகமாகும்.

ஒரு காலத்தில் நேரு, இந்திரா காந்தி ஆகியோரின் பெயரை சொன்னாலே லட்சக்கணக்கானோர் வந்து காங்கிரஸுக்கு வாக்களித்து விடுவார்கள். தற்போது நிலை அப்படியல்ல. பிராந்திய கட்சிகளும், சிறிய கட்சிகளும் தேர்தலில் கணிசமான அளவில் வெற்றி பெறுகின்றன. பாஜக போன்ற தேசிய கட்சிகளின் சவாலை எதிர்கொள்ளும் நிலையில், பிராந்திய கட்சிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இப்போது நடக்கும் தேர்தல் முடிவுகளை ஒவ்வொரு பூத்தும் தீர்மானிக்கிறது. காங்கிரஸ் கட்சியை பூத் வாரியாகப் பலப்படுத்த வேண்டியதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு பூத்திலும் போட்டி உள்ளது. அனைத்து பூத்களையும் வெல்ல வேண்டும். அனைத்து பூத்களிலும் இருப்பதற்குப் போதுமான அளவுக்கும் நமக்குத் தொண்டர்கள் தேவை. தொகுதியில் உள்ள அனைத்து பூத்களையும் நிர்வகிக்க வேண்டும். சக்தி செயலி அதற்கு உதவும்” என்று பேசினார்.

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

3 நிமிட வாசிப்பு

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

4 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

ஞாயிறு 29 ஜூலை 2018