மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஜூலை 2018

பருவமழை: 5 மாநிலங்களில் 465 பேர் பலி!

பருவமழை: 5 மாநிலங்களில் 465 பேர் பலி!

பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களால் 465 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுதொடர்பாக, மத்திய உள் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய அவசரகால உதவி மையத்தின் புள்ளிவிவரங்களில் குறிப்பிட்டிருப்பதாவது:

மகாராஷ்டிராவில் 138 பேரும், கேரளாவில் 125 பேரும், மேற்கு வங்கத்தில் 116 பேரும் கனமழையால் உயிரிழந்துள்ளனர். இதே எண்ணிக்கை அஸ்ஸாமில் 52ஆகவும், குஜராத்தில் 34ஆகவும் உள்ளது.

கனமழை காரணமாக மகாராஷ்டிராவில் 26 மாவட்டங்களும், மேற்கு வங்கத்தில் 22 மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. அஸ்ஸாமில் 21 மாவட்டங்களும், கேரளத்தில் 14 மாவட்டங்களும், குஜராத்தில் 10 மாவட்டங்களும் மழை பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.

அஸ்ஸாமில், கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 10.17 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2.17 லட்சம் மக்கள் முகாம்களில் வசித்து வருகின்றனர். இந்த மாநிலத்தில் மழைக்கு பிறகான மீட்புப் பணிகளில், தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த வீரர்கள் 12 குழுக்களாக பிரிந்து, ஒவ்வொரு குழுவிலும் 45 வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் 1.61 லட்சம் மக்கள் வெள்ளத்தாலும், மழையாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு பேரிடர் மீட்புப் படையின் எட்டு குழுவினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். குஜராத்தில் 15,912 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். அங்கு 11 மீட்புக் குழுவினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். கேரளத்தில் வெள்ளத்தால் 1.43 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு இதுவரை 125 பேர் பலியாகியுள்ள நிலையில், மேலும் 9 நபர்களை காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

3 நிமிட வாசிப்பு

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

4 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

ஞாயிறு 29 ஜூலை 2018