மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஜூலை 2018

விப்ரோவை வீழ்த்தி ஹெச்.சி.எல் முன்னேற்றம்!

விப்ரோவை வீழ்த்தி ஹெச்.சி.எல் முன்னேற்றம்!

விப்ரோ நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் நிறுவனம் இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய மென்பொருள் சேவை நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

நொய்டாவைத் தலைமையிடமாகக்கொண்டு ஹெச்.சி.எல் நிறுவனம் இயங்கி வருகிறது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் - ஜூன்) ஹெச்.சி.எல் நிறுவனத்தின் வருவாய் 0.8 விழுக்காடு அதிகரித்து 2.05 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் இந்த வருவாய் ரூ.17,156.25 கோடியாகும். இதே காலத்தில், பெங்களூருவைத் தலைமையிடமாகக்கொண்டு இயங்கிவரும் விப்ரோ நிறுவனத்தின் வருவாய் 1.7 விழுக்காடு சரிந்து 2.03 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.

கடந்த நிதியாண்டில் விப்ரோ நிறுவனத்தின் மொத்த வருவாய் 8.06 பில்லியன் டாலராக இருந்தது. இது ஹெச்.சி.எல் நிறுவனத்தின் வருவாயான 7.84 பில்லியன் டாலரைவிட 2.20 கோடி டாலர் கூடுதலாகும். எனினும், நடப்பு நிதியாண்டில் ஹெச்.சி.எல் நிறுவனத்தின் வருவாய் 10.4 விழுக்காடு அதிகரித்து 8.65 பில்லியன் டாலரை எட்டும் என்று அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது.

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

3 நிமிட வாசிப்பு

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

4 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

ஞாயிறு 29 ஜூலை 2018