மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஜூலை 2018

உத்தரப் பிரதேசம்: மழை வெள்ளத்தில் 53 பேர் பலி!

உத்தரப் பிரதேசம்: மழை வெள்ளத்தில் 53 பேர் பலி!

உத்தரப் பிரதேசத்தில் கனமழை பெய்துவருவதால், மழை வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக பலியானவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த மழைக்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 53 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில பேரிடர் மீட்பு ஆணையம் தெரிவிக்கையில், ''உத்தரப் பிரதேசத்தில் பெய்துவரும் கனத்த மழையின் காரணமாக ஆக்ராவில் ஆறு பேர் பலியாகியுள்ளனர். மேலும், முசாபர் நகர் மற்றும் காஸ்கஞ்ச் ஆகிய ஊர்களில் தலா மூன்று பேர், மீரட் மற்றும் மெயின்புரி ஆகிய ஊர்களில் தலா நான்கு பேர், பரேய்லியில் இருவர் மற்றும் கான்பூர் ஊரகப் பகுதியிலும், மதுரா, காஸியாபாத், ஹப்பூர், ரேபரேலி, ஜலாவுன், ஜான்பூர், ப்ரடாப்கர், புலன்ஷார், பிரோஸாபாத் மற்றும் அமேதி ஆகிய ஊர்களில் தலா ஒருவரும் இந்த மழைக்கு உயிரிழந்துள்ளனர்.

இதுதவிர, ஷரான்பூரில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கையில் ஈடுபட்ட நால்வர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், பன்னிரண்டு பேருக்கும் மேற்பட்டவர்கள் மழையில் பாதிக்கப்பட்டு உயிருக்கு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தக் கனமழை, தொழுவத்தில் கட்டியிருந்த மாடுகளையும் விட்டு வைக்கவில்லை. கான்பூர் ஊரகப் பகுதிகள், முஸாபர் நகர், லிலித்பூர் மற்றும் பிரதாப் நகர் பகுதிகளில் எண்ணற்ற மாடுகள் இறந்துள்ளன என்று மாநில பேரிடர் மீட்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் கணிசமான மழை இன்னும் தொடரும் என்பதால் மாவட்ட நிர்வாகங்களுக்கு எந்த ஒரு சூழலுக்கும் மக்களைக் காப்பாற்றத் தயாராக இருக்குமாறு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து முதல்வர் யோகி ஆதித்யநாத், மீட்பு பணிகளை கவனிக்குமாறு மூத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், பாதிப்பு ஏற்படக்கூடிய வகையில் இருக்கும் கட்டடங்களில் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லுமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

மேலும், இடிபாடுகளில் சிக்கி காயங்களுடன், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நபர்களின் மருத்துவக் கவனிப்பிலும் குறைகள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, மழை வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணத் தொகையையும் அறிவித்துள்ளார்.

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

3 நிமிட வாசிப்பு

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

4 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

ஞாயிறு 29 ஜூலை 2018