மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஜூலை 2018

எய்ம்ஸ் மருத்துவர்கள் உதவத் தயார்!

எய்ம்ஸ் மருத்துவர்கள் உதவத் தயார்!

திமுக தலைவர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

அவரது ரத்த அழுத்தம் சீராக இருப்பதாக காவேரி மருத்துவமனை அறிவித்துள்ளது. நேற்று முன் தினம் வெகுவாகக் குறைந்த ரத்த அழுத்தத்தை சீராக்க மருத்துவர்கள் பெரும் முயற்சி எடுத்திருக்கிறார்கள். அதன்படி ஹெவி டோஸ் கொண்ட மருந்தை ஊசி மூலம் செலுத்தியிருக்கிறார்கள். நேற்று ஓர் ஊசி, இன்று ஓர் ஊசி, நாளை ஓர் ஊசி என்று அந்த மருந்தை செலுத்தத் திட்டமிட்டுள்ளார்கள் மருத்துவர்கள்.

நேற்று காவேரி மருத்துவமனைக்கு வந்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல் நலம் குறித்து ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோரிடம் விசாரித்து அறிந்தார்.

கருணாநிதியின் மருத்துவ ஆவணங்களைப் பற்றி மருத்துவர்களிடம் விசாரித்த நிர்மலா சீதாராமன், ’‘என்ன உதவி வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறோம். எய்ம்ஸ் டாக்டர்களை வேண்டுமானால் அனுப்பி வைக்கட்டுமா?’’ என்றும் கேட்டிருக்கிறார்.

காவேரி மருத்துவமனை டாக்டர்கள் கொடுத்த மருத்துவ ஆவணங்களை அவர் டெல்லி எய்ம்ஸுக்கும் அனுப்பி வைத்திருக்கிறார்.

ஏற்கனவே ஸ்டாலினிடம் பேசியபோது பிரதமர் மோடி, ’‘கருணாநிதி உடல் நலம் பெற மத்திய அரசு என்ன வித உதவி வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறது’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

3 நிமிட வாசிப்பு

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

4 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

ஞாயிறு 29 ஜூலை 2018