மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஜூலை 2018

காவேரியின் புதிய அறிக்கை!

காவேரியின் புதிய அறிக்கை!

“திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது” என்று காவேரி மருத்துவமனை நேற்றிரவு புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

திமுக தலைவர் மு.கருணாநிதி ரத்த அழுத்தம் குறைவு காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து மருத்துவமனை முன்பு ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் குவிந்தனர். அடுத்த சில மணி நேரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா கருணாநிதியின் ரத்த அழுத்தம் சீரான நிலைக்கு வந்துவிட்டதாகத் தெரிவித்தார்.

பல்வேறு தலைவர்களும் கருணாநிதி உடல்நிலை குறித்து நேற்று நேரில் நலம் விசாரித்த நிலையில், மருத்துவமனையை விட்டு மதியம் புறப்பட்டுச் சென்ற ஸ்டாலின், மாலை 6 மணியளவில் மீண்டும் மருத்துவமனைக்குச் சென்றார். அவரை தொடர்ந்து அழகிரி, தமிழரசு, செல்வி, கனிமொழி எனக் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக வந்தனர்.

மருத்துவமனை அறிக்கை

கருணாநிதியின் உடல்நிலை குறித்து நேற்றிரவு 8 மணியளவில் அறிக்கை வெளியிட்ட காவேரி மருத்துவமனை, “திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மருத்துவ உதவியுடன் தொடர்ந்து சீராக இருந்துவருகிறது. அவர் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்குத் திறமை வாய்ந்த மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு சிறப்பான சிகிச்சை அளித்து வருகிறது” என்று தெரிவித்தது. அறிக்கை வெளியிடப்பட்டதையடுத்து மருத்துவமனை முன்பு கூடியிருந்த தொண்டர்கள் உற்சாக முழக்கங்களை எழுப்பி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

வருவாய் பற்றாக்குறை மானியம்: தமிழகத்துக்கு ரூ.183.67 கோடி!

2 நிமிட வாசிப்பு

வருவாய் பற்றாக்குறை மானியம்: தமிழகத்துக்கு ரூ.183.67 கோடி!

வேலைவாய்ப்பு : எஸ்.பி.ஐ வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : எஸ்.பி.ஐ வங்கியில் பணி!

கூடுதல் கட்டணம் : யாரிடம் புகார் அளிக்க வேண்டும்?

4 நிமிட வாசிப்பு

கூடுதல் கட்டணம் : யாரிடம் புகார் அளிக்க வேண்டும்?

ஞாயிறு 29 ஜூலை 2018