மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஜூலை 2018

இம்ரான் கானுடன் நட்பு பாராட்ட வேண்டும்!

இம்ரான் கானுடன் நட்பு பாராட்ட  வேண்டும்!

பாகிஸ்தானில் பிரதமராகப் பதவி ஏற்கவுள்ள இம்ரான் கானுடன் மோடி நட்பு பாராட்ட வேண்டும் என்று காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தி வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தானில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீஃப் இ இன்சாஃப் கட்சி 118 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ளது. இதற்கிடையில் “இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் காஷ்மீர் விவகாரம் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. காஷ்மீர் பிரச்சினையை இரு நாடுகளும் பேசித் தீர்க்க வேண்டும். இந்தியா விரும்பினால், இரு நாடுகளுக்கிடையே உறவை வலுப்படுத்த விரும்புகிறேன்” என்று பேட்டி அளித்திருந்தார் இம்ரான் கான்.

இம்ரான் கான் சொல்வதை செய்ய வேண்டும் என்று விரும்புவதாக காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தி, “பாகிஸ்தானில் புதிய அரசாங்கம் உருவாகவுள்ளது. இம்ரான் கான் இந்தியாவுக்கு நட்புக்கரம் நீட்டியுள்ளார். அதனைப் பிரதமர் மோடி சாதமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பாகிஸ்தானுடன் நட்புக்கரம் நீட்டியதுடன், எல்லைப்பகுதியில் போர்நிறுத்தத்தையும் ஏற்படுத்தினார். இதுதான் ஒரு தலைவருக்கு பெருமை. இதுபோன்ற தலைவர்கள் தேர்தலைப் பற்றி நினைப்பதில்லை, மக்களைப் பற்றி நினைக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் விவகாரம் எப்போதுமே நாட்டின் பிரதமர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ள மெகபூபா முப்தி, பாஜகவுடனான கூட்டணி அதிருப்தி அளித்ததாகத் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் நலனுக்கான எந்த ஒரு திட்டத்தையும் பாஜக செய்ய விடவில்லை. மாநிலத்தில் அமைதியைத் திரும்பச் செய்யும் முயற்சிக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு தரவில்லை. ஒரு கோப்பை விஷத்தை அருந்தியது போலவே கூட்டணி அரசு இருந்தது என்று கூறியுள்ளார்.

2014ஆம் ஆண்டு காஷ்மீரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இல்லாததால் பிடிபி கட்சியும், பாஜகவும் கூட்டணி அமைத்தன. எனினும் இரு கட்சிக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில் அண்மையில் பாஜக தனது ஆதரவை வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.

வருவாய் பற்றாக்குறை மானியம்: தமிழகத்துக்கு ரூ.183.67 கோடி!

2 நிமிட வாசிப்பு

வருவாய் பற்றாக்குறை மானியம்: தமிழகத்துக்கு ரூ.183.67 கோடி!

வேலைவாய்ப்பு : எஸ்.பி.ஐ வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : எஸ்.பி.ஐ வங்கியில் பணி!

கூடுதல் கட்டணம் : யாரிடம் புகார் அளிக்க வேண்டும்?

4 நிமிட வாசிப்பு

கூடுதல் கட்டணம் : யாரிடம் புகார் அளிக்க வேண்டும்?

ஞாயிறு 29 ஜூலை 2018