மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஜூலை 2018

உள்நாட்டிலேயே ராணுவத்திற்கான பொருட்கள் தயாரிப்பது பெருமிதம்!

உள்நாட்டிலேயே ராணுவத்திற்கான பொருட்கள் தயாரிப்பது பெருமிதம்!

ராணுவத்துக்குத் தேவையான உபகரணங்கள் அனைத்தும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுவதால், இனி வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய தேவை இருக்காது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

சென்னை அருகே உள்ள ஆவடி டேங்கர் தொழிற்சாலையில் ராணுவ டேங்குகள் டி72 அஜேயா மற்றும் டி90 பீஷ்மா ஆகியவற்றுக்குத் தேவையான என்ஜின்களை முழுமையாக உள் நாட்டிலேயே தயாரித்துள்ளனர்.

ஆவடி டேங்கர் தொழிற்சாலையில் உள்ள என்ஜின் பிரிவில் 'மேக் இன் இந்தியா (இந்தியாவில் தயாரிப்போம்)' திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட அதிநவீன என்ஜின்களை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டுக்காக அர்ப்பணித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், "ராணுவத்திற்குத் தேவையான முக்கிய பீரங்கிகளின் என்ஜின்கள் உள்நாட்டிலேயே தயார் செய்யப்பட்டிருப்பது பெருமிதம் அளிக்கிறது. இந்த டேங்குகள் இரண்டும் ரஷ்ய நாட்டு தயாரிப்பில் பெற்றவை. அதற்கான உதிரிப் பாகங்களை இதுவரை இறக்குமதி செய்து கொண்டிருந்தோம். இதே போன்ற ராணுவத்துக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் உள்நாட்டிலேயே தயாரித்தால், இனி வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யவேண்டிய தேவை இருக்காது. தரமாகவும் குறைந்த விலையிலும் பொருட்களை உற்பத்தி செய்யும்போது நாம் ஏற்றுமதியில் கால் பதிக்கலாம்" என்று தெரிவித்தார்.

வருவாய் பற்றாக்குறை மானியம்: தமிழகத்துக்கு ரூ.183.67 கோடி!

2 நிமிட வாசிப்பு

வருவாய் பற்றாக்குறை மானியம்: தமிழகத்துக்கு ரூ.183.67 கோடி!

வேலைவாய்ப்பு : எஸ்.பி.ஐ வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : எஸ்.பி.ஐ வங்கியில் பணி!

கூடுதல் கட்டணம் : யாரிடம் புகார் அளிக்க வேண்டும்?

4 நிமிட வாசிப்பு

கூடுதல் கட்டணம் : யாரிடம் புகார் அளிக்க வேண்டும்?

ஞாயிறு 29 ஜூலை 2018