மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஜூலை 2018

ரத்தத்தில் விரியும் வரலாறு!

ரத்தத்தில் விரியும் வரலாறு!

தனுஷ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகிவரும் வடசென்னை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் நேற்று (ஜூலை 28) வெளியாகியுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் மூன்றாவது முறையாக நடிக்கும் படம் வடசென்னை. வடசென்னையைக் கதைக்களமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தின் பணிகள் இரண்டு வருடங்களாக நடைபெற்று வருகின்றன.

தனுஷ் கேரம் விளையாட்டு வீரராக நடிக்கும் இந்தப் படத்தில் அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர், டேனியல் பாலாஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் முதன்முறையாக வெற்றிமாறனுடன் இணைந்து பணியாற்றுகிறார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று வெளியாகியுள்ள டீசரில் 80களின் பின்னணியில் கேரம் விளையாட்டிலிருந்து அரிவாளைத் தூக்கிக் கொண்டு கேங்ஸ்டராக மாறும் தனுஷ் கதாபாத்திரத்தின் மாற்றம் காட்டப்பட்டுள்ளது. ஆண்ட்ரியாவும், அமீரும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். அவர்களோடு சமுத்திரக்கனி, கிஷோர், ஐஸ்வர்யாவின் தோற்றம் வெளிப்பட்டுள்ளது. “நாம ஜெயிக்கிறோமோ, தோக்குறமோ முதல்ல சண்டை செய்யணும்”, “குடிசையோ, குப்ப மேடோ இது நம்ம ஊர் நாம தான் பார்த்துக்கணும்” போன்ற வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன.

முப்பது ஆண்டுகால வரலாற்றை விவரிக்கும் விதமாகத் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதால் இரண்டு அல்லது மூன்று பாகங்களாகப் படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. முதல் பாகம் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது.

வடசென்னை ஃபர்ஸ்ட் லுக் டீசர்

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

3 நிமிட வாசிப்பு

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

4 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

ஞாயிறு 29 ஜூலை 2018