மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஜூலை 2018

அஜித் படத்தில் ‘டபுள்’ ரோல்!

அஜித் படத்தில்  ‘டபுள்’ ரோல்!

நடிகர் தம்பி ராமையா, அஜித் நடிக்கும் விசுவாசம் படத்தில் பாடல் ஒன்றைப் பாடவிருக்கிறார்.

வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் சிவா - அஜித் காம்பினேஷனில் உருவாகிவரும் படம் விசுவாசம். இந்தப் படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் விவேக், யோகி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

இதில் முக்கிய ரோலில் நடித்துள்ள தம்பி ராமையா நடிப்பு மட்டுமல்லாது இந்தப் படத்தில் பாடல் ஒன்றையும் பாடவிருக்கிறார். தான் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த ‘உ’ என்னும் படத்தில் ஒரு பாடல் பாடியிருந்த தம்பி ராமையா முன்னதாக ‘ஒரு கூடை முத்தம்’ என்னும் படத்தில் இரு பாடல்களையும் பாடியிருந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இந்தப் படத்தில் ஒரு பாடல் பாடவுள்ளார்.

முரளியை வைத்து மனுநீதி, வடிவேலுவை ஹீரோவாக வைத்து பிரமாண்ட பொருட்செலவில் இந்திரலோகத்தில் நா. அழகப்பன் போன்ற படங்களை இயக்கி ஓர் இயக்குநராகவும் முத்திரை பதித்தவர் தம்பி ராமையா. பல திரைப்படங்களில் காமெடியில் கலக்கிய இவர் மைனா படம் மூலம் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றிருந்தார்.

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

3 நிமிட வாசிப்பு

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

4 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

ஞாயிறு 29 ஜூலை 2018