மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஜூலை 2018

வலிமையும் வேகமும் கொண்ட விலங்கு!

வலிமையும் வேகமும் கொண்ட விலங்கு!

தினப் பெட்டகம் – 10

(29.07.2018)

உலகப் புலிகள் தினமான இன்று (ஜூலை 29) புலிகள் பற்றிய தகவல்கள்:

1. புலி ஆறு மீட்டர் நீளத்தையும், ஐந்து மீட்டர் உயரத்தையும் குதித்துத் தாண்டிவிடும்.

2. வெள்ளைப் புலிகளை உருவாக்கும் அரிய மரபணு 10,000 புலிகளில் ஒரு புலி என்ற அளவில்தான் உருவாகிறது.

3. புலிகள் பெரும்பாலும் தனியாகவே வேட்டையாடும்; இரவில், இரையின் மேல் பாய்ந்து கழுத்தில் கடித்துவிடும்.

4. புலிகளின் வேட்டையில் 10%க்கும் குறைவாகவே வெற்றியில் முடிகின்றன.

5. பூனைக் குடும்பத்தில் மிகப் பெரிய உறுப்பினர் புலி.

6. புலிகள் 3.3 மீட்டர் உயரம் வளரக்கூடியவை. 300 கிலோ வரை எடை இருக்கும்.

7. ஆண் புலிகள் குட்டிகளை வளர்ப்பதில் எவ்விதப் பங்கும் வகிப்பதில்லை. பெண் புலிகள் 2-6 குட்டிகள் ஈன்று, இரண்டு வயது வரை அவற்றை வளர்க்கும்.

8. புலியின் உறுமல் மூன்று கிலோமீட்டருக்கு அப்பாலும் கேட்க முடியும்.

9. ஒவ்வொரு புலியின் உடலில் உள்ள கோடுகளும், கைரேகை மாதிரி தனித்துவமானது.

10. உலகில் இருந்த புலிகளின் ஒன்பது இனங்களில், இன்று ஆறு இனங்கள் மட்டுமே இருக்கின்றன. அவை:

· சைபீரியன் புலிகள்

· வங்காளப் புலிகள்

· இந்தோ - சீன புலிகள்

· மலாயன் புலிகள்

· சுமத்திரன் புலிகள்

· தென்சீனப் புலிகள்

அழிந்து போன இனங்கள்:

· பாலி புலிகள்

· காஸ்பியன் புலிகள்

· ஜவான் புலிகள்

- ஆஸிஃபா

வருவாய் பற்றாக்குறை மானியம்: தமிழகத்துக்கு ரூ.183.67 கோடி!

2 நிமிட வாசிப்பு

வருவாய் பற்றாக்குறை மானியம்: தமிழகத்துக்கு ரூ.183.67 கோடி!

வேலைவாய்ப்பு : எஸ்.பி.ஐ வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : எஸ்.பி.ஐ வங்கியில் பணி!

கூடுதல் கட்டணம் : யாரிடம் புகார் அளிக்க வேண்டும்?

4 நிமிட வாசிப்பு

கூடுதல் கட்டணம் : யாரிடம் புகார் அளிக்க வேண்டும்?

ஞாயிறு 29 ஜூலை 2018