மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஜூலை 2018

இங்கிலாந்து டெஸ்ட்: எழும் கேள்விகள்!

இங்கிலாந்து டெஸ்ட்: எழும் கேள்விகள்!

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 1ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதற்கு முன்னதாக இங்கிலாந்து எசெக்ஸ் அணியுடனான மூன்று நாட்கள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி பங்கேற்றது. இந்தப் போட்டியின் முடிவு, இந்திய அணிக்கு சில பாடங்களைக் கற்றுத் தந்துள்ளது.

தவன், ராகுல் யாருக்கு வாய்ப்பு?

இங்கிலாந்தின் செல்ம்ஸ்ஃபோர்டு நகரில் கடந்த 25ஆம் தேதி தொடங்கிய இந்தப் பயிற்சி ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில், முரளி விஜய் - ஷிகர் தவன் ஜோடியைக் கொண்டு இந்திய அணி களமிறங்கியது. இதில் ஷிகர் தவன், முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இரண்டாவது இன்னிங்ஸில் கே.எல்.ராகுலுடன் களமிறங்கிய தவன் அந்த முறையும் டக்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இதன்மூலம் இரண்டு இன்னிங்ஸிலும் டக்-அவுட் ஆன ஷிகர் தவன் முதல் டெஸ்ட்டில் இடம்பெறுவாரா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. அவருக்குப் பதிலாக முதல் இன்னிங்ஸில் அரைசதம் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 36 ரன்கள் எடுத்த கே.எல்.ராகுலைக் களமிறக்கவும் வாய்ப்புள்ளது.

பொறுப்பை உணர்வாரா விராட் கோலி?

இந்தத் தொடர் இந்திய கேப்டன் விராட் கோலிக்கு மிகவும் முக்கியமானதாகும். கடந்த முறை இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது இவர் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானார். தற்போது குறுவடிவ ஆட்டங்களில் சிறப்பான ஃபார்மை வெளிப்படுத்தி வரும் இவர், அதை டெஸ்ட் தொடரிலும் தொடர்வாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். நடந்து முடிந்த பயிற்சி ஆட்டத்தில் கோலி, 12 பவுண்டர்கள் உட்பட 93 பந்துகளைச் சந்தித்து 68 ரன்கள் எடுத்திருந்தார்.

மூன்றாம் நிலை யாருக்கு?

தற்போதைய இந்திய டெஸ்ட் அணியில் ஓப்பனிங்; மிடில் ஆர்டர் என அனைத்து நிலைகளிலும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மண்ணிற்கு ஏற்ற வகையில் மாற்றங்கள் நிகழலாம். ஆனால் செத்திஸ்வர் புஜாராவின் மூன்றாவது இடத்திற்கு மட்டும் இதில் விதிவிலக்கு.

புஜாரா, இந்தத் தொடருக்கு முன்பாக இங்கிலாந்தின் கவுண்டி அணிக்காக விளையாடி, அந்த மண்ணின் தன்மைக்கு தன்னை ஆயத்தமாக்கியிருந்தார். இருப்பினும் நடந்து முடிந்த எசெக்ஸ் அணிக்கு எதிரான பயிற்சிப்போட்டியில் இவர் எதிர்பார்த்த அளவுக்கு பேட்டிங் செய்யவில்லை. முதல் இன்னிங்ஸில் 1 ரன்னும், இரண்டாவது இன்னிங்ஸில் 23 ரன்களும் எடுத்திருந்தார். இருந்தாலும் தற்போதைய அணியில் மூன்றாம் நிலைக்கு வேறு பொருத்தமான ஆல் இல்லாததால் முதல் டெஸ்ட்டில் இவருக்கு வாய்ப்பு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.

வேகம் எந்த அளவுக்குக் கைகொடுக்கும்?

இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் தற்போது சிறப்பாக ஆடி வந்தாலும், இங்கிலாந்து அதன் சொந்த மண்ணில் விளையாடுவதால் அந்த அணியின் வேகப்பந்து வீச்சு பலமானதாக இருக்கும் என்று தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் தெரிவித்திருந்தார்.

காயம் காரணமாக இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஸ்வர் குமார், ஜஸ்ப்ரித் பும்ரா இருவரும் இத்தொடரிலிருந்து வெளியேறியது இந்திய அணிக்குக் கூடுதல் பின்னடைவாக அமைந்துள்ளது. வேகப்பந்து வீச்சுக்குச் சாதமான இங்கிலாந்து மண்ணில் தொடரை வெல்ல இந்திய அணி இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது ஷமி ஆகியோரை மட்டுமே நம்பியுள்ளது.

டெஸ்ட்டிலும் சுழலுமா?

இங்கிலாந்துக்கு எதிரான குறுவடிவ தொடரில் சிறப்பாகப் பந்து வீசியிருந்த குல்தீப் யாதவுக்கு டெஸ்ட் தொடரில் முதன்முறையாக வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதேபோல் டெஸ்ட்டில் அனுபவம் வாய்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

குறுவடிவ ஆட்டங்களில் இங்கிலாந்து வீரர்கள் குல்தீப்பின் பந்துவீச்சைச் சமாளிக்கமுடியாமல் திணறினர். இதனால் குல்தீப்புக்கும்; அனுபவ வீரர் என்ற முறையில் அஸ்வினுக்கும் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கலாம்.

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

3 நிமிட வாசிப்பு

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

4 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

ஞாயிறு 29 ஜூலை 2018