மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஜூலை 2018

எலிபேன்ட் கேட் பாலம் சீரமைப்பு!

எலிபேன்ட் கேட் பாலம் சீரமைப்பு!

சென்னை எலிபேன்ட் கேட் ரயில்வே பாலம் ரூ.26.45 கோடி செலவில் சீரமைக்கப்படவுள்ளது.

சென்னை சென்ட்ரல் பின்புறம் இருக்கும் வால்டாக்ஸ் சாலையில் யானை கவுனி மேம்பாலம் (எலிபேன்ட் கேட்) உள்ளது. ஓராண்டுக்கும் மேலாக இப்பாலம் கார்கள் மற்றும் கனரக வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு மூடப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தை இடித்து விரிவுபடுத்தும் பணி விரைவில் தொடங்கவுள்ளது. இந்தப் பாலத்தை தெற்கு ரயில்வே மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து சம பங்கீட்டில் ரூ.26.45 கோடி செலவில் சீரமைக்கவுள்ளன. இந்தப் பாலத்தை இடிப்பதற்கான டெண்டரை பெருநகர சென்னை மாநகராட்சியிடமிருந்து தெற்கு ரயில்வே சமீபத்தில் பெற்றது. தற்போது 47 மீட்டர் நீளமுள்ள இப்பாலம் இடிக்கப்பட்டு 155 மீட்டர் நீளத்துக்கு விரிவுபடுத்தப்படும் என்று தெற்கு ரயில்வேயின் மூத்த அதிகாரி ஒருவர் டிஎன்என் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

சென்னை புறநகர் ரயில் போக்குவரத்தைத் துரிதப்படுத்தும் நோக்கில் 2016 டிசம்பரில் மூர் மார்க்கெட் மற்றும் பேசின் பிரிட்ஜ் இடையேயான சந்திப்பில் ஐந்தாவது மற்றும் ஆறாவது ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கியது. இப்போது இடிக்கப்பட்டுக் கட்டப்படும் பாலத்தில் நீளம் 575 மீட்டர் அளவுக்கு இருக்கும். பாலத்தின் இரு ஆதரவுத் தூண்களும் 7.5 மீட்டர் அகலத்துக்கு இருக்கும்படி அமைக்கப்படுகிறது. காவல் துறையினர் சார்பாக இப்பாலத்தில் போக்குவரத்து திசை திருப்பு வசதிகள் அமைக்கப்பட்ட பின்னர் பாலத்தை இடிக்கும் பணி தொடங்கும் என்று சென்னை நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

வருவாய் பற்றாக்குறை மானியம்: தமிழகத்துக்கு ரூ.183.67 கோடி!

2 நிமிட வாசிப்பு

வருவாய் பற்றாக்குறை மானியம்: தமிழகத்துக்கு ரூ.183.67 கோடி!

வேலைவாய்ப்பு : எஸ்.பி.ஐ வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : எஸ்.பி.ஐ வங்கியில் பணி!

கூடுதல் கட்டணம் : யாரிடம் புகார் அளிக்க வேண்டும்?

4 நிமிட வாசிப்பு

கூடுதல் கட்டணம் : யாரிடம் புகார் அளிக்க வேண்டும்?

ஞாயிறு 29 ஜூலை 2018