மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஜூலை 2018

விலையைக் குறைக்க உடனடி நடவடிக்கை!

விலையைக் குறைக்க உடனடி நடவடிக்கை!

வரிக் குறைப்பிற்கான பலன்கள் மக்களுக்குக் கிடைக்கும் வகையில் பொருட்களின் மீது ஸ்டிக்கர்களை ஒட்டி விலையைத் திருத்துமாறு நிறுவனங்களை ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஜூலை 21ஆம் தேதி டெல்லியில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சுமார் 88 பொருட்களின் வரி விகிதம் குறைக்கப்பட்டது. இந்த வரிக் குறைப்பு ஜூலை 27ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. வரிக் குறைப்பின் பலன்களை மக்களுக்கு உடனடியாகக் கிடைக்கச் செய்யும் வகையில் அவற்றின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை உடனடியாகத் திருத்த வேண்டுமென்று ஒன்றிய அரசு நிறுவனங்களை அறிவுறுத்தியுள்ளது.

28 விழுக்காடு வரி விதிப்பில் இருந்த 15 பொருட்கள் 18 விழுக்காடு வரி விதிப்புக்கு மாற்றப்பட்டன; சானிட்டரி நாப்கினுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. இதையடுத்து ஜூலை 27ஆம் தேதி நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் மாநில எடை அளவியல் துறைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அந்தக் கடிதத்தில் பொருட்களின் மீது ஸ்டிக்கர்களைப் பயன்படுத்தி புதிய விலையை டிசம்பர் 31ஆம் தேதிக்குள் திருத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து மூத்த அரசு அதிகாரி ஒருவர் தி எக்கனாமிக் டைம்ஸ் ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில், “பல்வேறு பொருட்களுக்கான வரி கடந்த வாரத்தில் குறைக்கப்பட்டுள்ளது. வரி குறைக்கப்பட்ட பொருட்களின் பலனை மக்களுக்குக் கிடைக்கச் செய்யும் வகையில் பொருட்களின் பாக்கெட்டுகளில் உடனடியாகத் திருத்தப்பட்ட அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை ஒட்ட வேண்டும். பல பொருட்கள் இப்போது அதிகபட்ச விலையில் சந்தையில் விற்கப்படுகின்றன. வரிக் குறைப்பின் பயன்கள் மக்களுக்கு முழுதாகக் கிடைக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

3 நிமிட வாசிப்பு

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

4 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

ஞாயிறு 29 ஜூலை 2018