மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஜூலை 2018

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?

நவீன விவசாய அறிவியலிடம் சில கேள்விகள்!

நவீன அறிவியலிடம் ஒரு சாதாரணக் கேள்வி.

“செரிமான ஆற்றல் இல்லாத உடலுக்குள் உணவுகளையும் ஊட்டச் சத்துகளையும் திணிப்பதில் ஏதாவது பயன் உண்டா?”

இல்லை என்பதுதான் உங்கள் நிச்சயமான பதிலாக இருக்கும். அப்படியெனில்,

“சிதைக்கும் ஆற்றல் இல்லாத மண்ணில் கொட்டப்படும் உரங்களாலும் ஊட்டச் சத்துகளாலும் ஏதாவது பயன் உண்டா?”

இதற்கு மட்டும் ‘உண்டு’ என்று பதில் சொன்னால், அதை எப்படி ஏற்பது? ஆனால், அப்படித்தான் சொல்கிறார்கள் பசுமைப் புரட்சி ஆதரவாளர்கள்.

அடுத்ததாக நவீன விவசாய அறிவியலாளர்களிடம் ஓர் உரையாடல்.

உடலின் உள்ளே அனுப்பப்படும் உணவுகளைச் சிதைப்பது எது?

“உடலில் உள்ள நுண்ணுயிரிகள்.”

உடலில் உள்ள நுண்ணுயிர்க் கூட்டத்தை அழித்துவிட்டால், உடலால் உணவைச் சிதைக்க இயலுமா?

“நிச்சயமாக முடியாது.”

நிலத்தில் கொட்டப்படும் கழிவுகளைச் சிதைத்து உரமாக்குவது எது?

“நிலத்தில் உள்ள புழுக்கள் மற்றும் நுண்ணுயிரிகள்தான்.”

நீங்கள் வழங்கும் ரசாயன உரங்களாலும், பூச்சிக்கொல்லிகளாலும் அந்தப் புழுக்களும் நுண்ணுயிர்களும் அழியுமா, வாழுமா?

“அழியும்.”

அப்படியெனில், நுண்ணுயிரிகள் இல்லாத நிலம், ஊட்டச்சத்தைச் சிதைக்கும் ஆற்றல் இல்லாத நிலமாக மாறிவிடும் அல்லவா?

“ஆம்.”

பிறகு நீங்கள் கொடுக்கும் உரங்களால் என்ன பயன்?

“...”

இங்கேதான் பிரச்சினை ஆரம்பிக்கிறது. நிலத்தின் மீது அக்கறையற்ற இந்த நவீன விவசாயத்தால் நிலம் தனது வளத்தை இழந்துவிட்டது. பொருளாதார வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், நிலம் தனது உற்பத்தித் திறனை இழந்துவிட்டது. இப்போதாவது திருந்திப் பழைய நிலைக்குச் செல்வார்கள் என்று பார்த்தால், அடுத்த அபத்தத்துக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள்!

அது என்ன தெரியுமா?

வருவாய் பற்றாக்குறை மானியம்: தமிழகத்துக்கு ரூ.183.67 கோடி!

2 நிமிட வாசிப்பு

வருவாய் பற்றாக்குறை மானியம்: தமிழகத்துக்கு ரூ.183.67 கோடி!

வேலைவாய்ப்பு : எஸ்.பி.ஐ வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : எஸ்.பி.ஐ வங்கியில் பணி!

கூடுதல் கட்டணம் : யாரிடம் புகார் அளிக்க வேண்டும்?

4 நிமிட வாசிப்பு

கூடுதல் கட்டணம் : யாரிடம் புகார் அளிக்க வேண்டும்?

ஞாயிறு 29 ஜூலை 2018