மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஜூலை 2018

சாம் சி.எஸ் - யுவன்: புதிய கூட்டணி!

சாம் சி.எஸ் - யுவன்: புதிய கூட்டணி!

சாம் சி.எஸ். இசையில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா முதன்முறையாக பாடல் பாடியுள்ளார்.

எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மனோஜ் பீதா இயக்குநராக அறிமுகமாகும் படம் 'வஞ்சகர் உலகம்'. சிபி - அனிஷா ஆம்ப்ரூஸ், சாந்தினி தமிழரசன் நடிப்பில் காதல் கலந்த த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது. குரு சோமசுந்தரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

புரியாத புதிர், விக்ரம் வேதா, இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த சாம்.சி.எஸ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இதில் ஒரு பாடலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பாடினால் நன்றாக இருக்கும் என நினைத்த சாம் யுவனை அணுகியுள்ளார். யுவனும் சம்மதிக்க, ரொமான்டிக் மெலடியில் யுவன் ஒரு பாடலைப் பாடியுள்ளார். குறிப்பிட்ட சில படங்கள் மட்டுமே இசையமைத்திருந்தாலும் கவனிக்கத்தக்க இசையமைப்பாளராக சாம் வலம் வருகிறார். யுவனின் இசையைப் போன்றே அவரது குரலுக்கும் பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. தனது பாடல்களுக்கு மட்டுமல்லாமல் மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களுக்கும் யுவன் குரல் கொடுத்துவருகிறார். சமீபத்தில் இமான் இசையில் டிக் டிக் டிக் படத்திற்காக ஒரு பாடல் பாடியிருந்தார். சாம் இசையில் முதன்முறையாக யுவன் பாடியுள்ளதால் பாடல் நல்ல வரவேற்பு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வருவாய் பற்றாக்குறை மானியம்: தமிழகத்துக்கு ரூ.183.67 கோடி!

2 நிமிட வாசிப்பு

வருவாய் பற்றாக்குறை மானியம்: தமிழகத்துக்கு ரூ.183.67 கோடி!

வேலைவாய்ப்பு : எஸ்.பி.ஐ வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : எஸ்.பி.ஐ வங்கியில் பணி!

கூடுதல் கட்டணம் : யாரிடம் புகார் அளிக்க வேண்டும்?

4 நிமிட வாசிப்பு

கூடுதல் கட்டணம் : யாரிடம் புகார் அளிக்க வேண்டும்?

ஞாயிறு 29 ஜூலை 2018