மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஜூலை 2018

ஏற்றுமதியைக் குறைக்கும் விலைச் சரிவு!

ஏற்றுமதியைக் குறைக்கும் விலைச் சரிவு!

இறால்களுக்கான விலை குறைந்துள்ளதால் நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் இறால் ஏற்றுமதி மந்தமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் கடல் உணவுகள் ஏற்றுமதியில் முக்கியப் பங்கு வகிக்கும் இறால்களின் விலை இந்த ஆண்டில் 20 சதவிகிதம் வரையில் குறைந்துள்ளது. மேலும், வெண்புள்ளி நோய் தாக்கத்தால் இறால் பண்ணையாளர்கள் பலர் தங்களது உற்பத்தியைக் குறைத்துக் கொண்டுள்ளனர். மீன் வளர்ப்பு வல்லுநர் சங்கத்தின் முன்னாள் தலைவரான முத்துக்கருப்பன் இதுபற்றி எகனாமிக் டைம்ஸ் ஊடகத்திடம் பேசுகையில், “அடுத்த அறுவடைக்காகப் பண்ணைகளில் இறால்களை இருப்பு வைக்கும் அளவைப் பண்ணையாளர்கள் குறைத்துள்ளனர். விலைச் சரிவு தொடர்பான அச்சம் அவர்களிடையே உள்ளது. மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதால் இறால் ஏற்றுமதியாளர்கள் அமெரிக்காவில் அதிகக் கவனம் செலுத்துகின்றனர். அங்கும் அதிக விநியோகம் காரணமாக இறால்களின் விலை குறைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

சென்ற ஆண்டில் இந்தியாவின் கடல் உணவுகள் ஏற்றுமதி மதிப்பு ரூ.45,106 கோடியாக இருந்தது. 6 லட்சம் டன் அளவிலான இறால்களை ஏற்றுமதி செய்து சர்வதேச அளவில் இந்தியா முன்னிலையில் இருந்தது. ஆனால், தொடர் விலைச் சரிவால் இந்த ஆண்டில் இறால் ஏற்றுமதியிலும் உற்பத்தியிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கடந்த அறுவடைப் பருவத்தில் இறால் வளர்ப்பாளர்கள் கடும் இழப்புகளைச் சந்தித்துள்ளதால் விலை சீராகும் வரை அவர்கள் தங்களது உற்பத்தியை அதிகரிக்கப் போவதில்லை என்று முத்துக்கருப்பன் கூறுகிறார்.

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

3 நிமிட வாசிப்பு

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

4 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

ஞாயிறு 29 ஜூலை 2018