மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 29 ஜூலை 2018

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வந்தடைந்த ரயில்!

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வந்தடைந்த ரயில்!

ஆந்திராவில் இருந்து உர மூட்டைகளுடன் 2014ஆம் ஆண்டு புறப்பட்ட சரக்கு ரயில் சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 25ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தைச் சென்றடைந்துள்ளது.

ஆந்திராவின் விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் தேதி 1,316 உர மூட்டைகளுடன் சரக்கு ரயில் ஒன்று புறப்பட்டது. இது கடந்த புதன்கிழமை மாலை 3.30 மணிக்கு உத்தரப் பிரதேசத்தின் பஸ்தி ரயில் நிலையத்தை அடைந்தபோது ரயில்வே அதிகாரிகளே சற்று அதிர்ச்சி அடைந்தனர்.

ஏனெனில், சாதாரணமாக ஆந்திராவிலிருந்து உத்தரப்பிரதேசம் செல்வதற்கு 42 மணி நேரம் 13 நிமிடங்கள் மட்டுமே ஆகும். இரு மாநிலங்களுக்கிடையே 1,326 கி.மீ தொலைவு உள்ளது. ஆனால், இந்த ரயில் சென்றடைய நான்கு ஆண்டுகள் ஆகின.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், சரக்கு ரயிலில் சில சமயங்களில் ஏதேனும் ஒரு பெட்டி பழுதடைந்து விட்டால், அதைப் பழுது பார்ப்பதற்காகப் பணிமனைக்கு அனுப்பி வைக்கப்படும். அதுபோன்று, இந்த விவகாரத்திலும் நடந்திருக்கலாம் எனக் கூறினர்.

தான் புக்கிங் செய்திருந்த சரக்கு வரவில்லையென்று குப்தா என்பவர் ரயில்வேயிடம் புகார் அளித்தார். ஆனால், அதுகுறித்து ரயில்வே எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை அறிந்த பிறகு, குப்தா அது குறித்து விசாரிப்பதை நிறுத்திவிட்டார்.

வருவாய் பற்றாக்குறை மானியம்: தமிழகத்துக்கு ரூ.183.67 கோடி!

2 நிமிட வாசிப்பு

வருவாய் பற்றாக்குறை மானியம்: தமிழகத்துக்கு ரூ.183.67 கோடி!

வேலைவாய்ப்பு : எஸ்.பி.ஐ வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : எஸ்.பி.ஐ வங்கியில் பணி!

கூடுதல் கட்டணம் : யாரிடம் புகார் அளிக்க வேண்டும்?

4 நிமிட வாசிப்பு

கூடுதல் கட்டணம் : யாரிடம் புகார் அளிக்க வேண்டும்?

ஞாயிறு 29 ஜூலை 2018