மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருப்பார்!

இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருப்பார்!

”திமுக தலைவர் மு.கருணாநிதி இன்னும் இரண்டு நாட்கள் வரை மருத்துவமனையில் மருத்துவர்கள் மேற்பார்வையில் இருப்பார்” என்று திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நலம் குறித்து தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் தொடர்ந்து நலம் விசாரித்துவருகின்றனர்.

மருத்துவமனை முன்பு செய்தியாளர்களிடம் பேசிய திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், “தலைவர் உடல்நிலை சற்று குன்றிய நேரத்தில் அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதன் மூலம் நல்ல முன்னேற்றத்தைக் காண முடியும் என்று மருத்துவர்களும் கூறினார்கள். மருத்துவமனையில் சேர்ந்த சிறிது நேரத்திலேயே அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. ரத்த அழுத்தமும் சரியான அளவுக்கு வந்துவிட்டது. அவர் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் மருத்துவர்கள் மேற்பார்வையில் இருக்க வேண்டும் என்ற நிலை மட்டும்தான் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில், “கலைஞர் கருணாநிதி பிறவிப் போராளி. அவர் விரைவில் குணமடைந்து நல்ல உடல்நலம் பெறுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். விரைவில் அவர் நலம் பெற வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கருணாநிதி நலம் பெற வேண்டி திருவாரூரில் அவர் படித்த வ.சோ பள்ளியில் மாணவர்கள் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் #Karunanidhi என்னும் ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகிவருகிறது.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018