மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

ஷ்ரித்தா: கேரள புது வரவு!

ஷ்ரித்தா: கேரள புது வரவு!

தில்லுக்கு துட்டு 2 படத்தில் கதாநாயகியாக மலையாள நடிகை ஷ்ரித்தா சிவதாஸ் அறிமுகமாகிறார்.

ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்த ‘தில்லுக்கு துட்டு’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. ஹாரர் காமெடி ஜானரில் உருவாகிய அந்த படத்தில் ஆஞ்சல் சிங் கதாநாயகியாக நடித்திருந்தார். முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பு காரணமாக இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் ராம்பாலா -சந்தானம் கூட்டணி களமிறங்கியது. மார்ச் மாதம் இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது. இரண்டாம் பாகத்தில் கதாநாயகியாக தீப்தி என்ற புதுமுகம் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.

கதைப்படி கதாநாயகி மலையாளம் பேசுபவராக உள்ளதால் தீப்திக்கு பதிலாக மலையாள நடிகை ஷ்ரித்தா சிவதாஸை கதாநாயகியாக இணைத்துள்ளனர். 2012ஆம் ஆண்டு ஷ்ரித்தா ‘ஆர்டினரி’ என்ற மலையாளத் திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து அங்குத் திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் வலம் வரும் அவர் தில்லுக்கு துட்டு 2 மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018