மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

டெண்டரில் குறைபாடு: முழுப்பொறுப்பையும் ஏற்கிறேன்!

டெண்டரில் குறைபாடு: முழுப்பொறுப்பையும் ஏற்கிறேன்!

"மின்சாரத் துறை டெண்டரில் குறைகள் இருப்பதாக கூறப்பட்டால் அதற்கான முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்" என்று மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

1,200 கோடி மின்வாரிய டெண்டர் விவகாரத்தில் தனியாருக்கு சாதகமாக விதிகளை திருத்த சதி நடக்கிறது என்று கண்டனம் தெரிவித்து கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டிருந்த அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன், ”இந்த விதிமீறலுக்கு உடன்பட மறுக்கும் அதிகாரிகள் மிரட்டப்படுவதாக வரும் தகவல்களும் கவலை அளிக்கிறது. மின் துறை அமைச்சர் தங்கமணி இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு, விதிமீறலைத் தடுத்து நிறுத்த வேண்டும். சென்னை மாநகரில் சீரான மின் விநியோகத்தை உறுதிப்படுத்தும் மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் திட்டம் இனியும் தாமதப்படுத்தப்படாமல், உடனடியாக செயல்பாட்டுக்கு வரவேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில் நாமக்கல்லில் இன்று (ஜூலை 28) செய்தியாளர்களிடம் பேசிய மின் துறை அமைச்சர் தங்கமணி, “அனைத்துப் பணிகளும் ஈ டெண்டர் முறையில்தான் வழங்கப்பட்டு வருகின்றன. நிலக்கரி கொள்முதலில் ரிவர்ஸ்டு டெண்டரை முதலில் கொண்டுவந்தது தமிழ்நாடுதான். வேலைவாய்ப்பாக இருந்தாலும் சரி, டெண்டராக இருந்தாலும் சரி, பணி நியமனமாக இருந்தாலும் சரி அனைத்தும் வெளிப்படையாகவே நடைபெறுகின்றன. எந்த டெண்டரில் எந்த குறைபாடு இருப்பதாகக் கூறப்பட்டாலும் அதற்கான பொறுப்பை நானே ஏற்றுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018