மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

ஸ்டெர்லைட்: தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது!

ஸ்டெர்லைட்: தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை தொடர்பாக, மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த ஒருவர், தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடியில் கடந்த மாதம் 22ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இந்தக் கலவரத்தின்போது காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்திற்குப் பல்வேறு தரப்பிலிருந்து கண்டங்கள் குவிந்தன. இந்தச் சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் மீது 243 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் நீதிமன்றத்திலும் இதுதொடர்பாக பல வழக்குகள் தொடரப்பட்டு, விசாரணை நடைபெற்றுவருகிறது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மக்கள் அதிகார அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டுவருவது தொடர்ந்து நடைபெறுகிறது.

"ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் உறுப்பினர்கள் தீவிரமாக பங்கேற்றனர், ஆனால், அவர்கள் ஒருபோதும் வன்முறையில் ஈடுபடவில்லை. ஆனால் அவர்கள் குறிவைக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்படுகின்றனர். அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் எந்த முதன்மையான ஆதாரங்களும் இல்லை. காவல் துறையினர் உடனடியாக இது போன்ற நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்" என மக்கள் அதிகாரம் என்ற இடதுசாரி அமைப்பின் சார்பாக காளியப்பன் நீதிமன்றத்தில் முன்பு தெரிவித்திருந்தார்.

இந்த அமைப்பைச் சேர்ந்த 6 பேர் ஏற்கனவே தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவின் பேரில், மக்கள் அதிகாரம் அமைப்பின் தூத்துக்குடி ஒருங்கிணைப்பாளர் அரி ராகவன் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018