மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

ஜிஎஸ்டியில் தோல்வியடைந்த பாஜக!

ஜிஎஸ்டியில் தோல்வியடைந்த பாஜக!

ஜிஎஸ்டியை திறம்படச் செயல்படுத்துவதில் பாஜக அரசு தோற்றுவிட்டதாகக் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

இதுபற்றி ட்விட்டரில் இன்று (ஜூலை 28) அவர் அடுத்தடுத்து 5 பதிவுகளை இட்டுள்ளார். அதில், “புதிய வரி விதிப்பில் 28 விழுக்காடு வரி என்பது முந்தைய வரி நடைமுறையான கலால் வரி, மதிப்பு கூட்டு வரி (வாட்) மற்றும் மத்திய விற்பனை வரி ஆகியவற்றை இணைத்ததாக மட்டும்தான் உள்ளது. ஜிஎஸ்டி தவறாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கு இதில் 28 விழுக்காடு வரி விதிக்கப்பட்டுள்ளதே சிறந்த உதாரணம்.

இந்தச் சோம்பேறி பாஜக அரசு வாட் வரியையும், கலால் வரியையும், மத்திய விற்பனை வரியையும் மட்டும் இணைத்துள்ளது. தலைமைப் பொருளாதார ஆலோசகர் ஜிஎஸ்டியில் அதிகபட்சமாக 18 விழுக்காடு வரி மட்டுமே விதிக்கலாம் என்றபோது அவரது கருத்தை ஏற்காமல் ஒதுக்கித் தள்ளியது. ஆனால் இப்போது 28 விழுக்காடு வரியைக் கிட்டத்தட்ட நீக்கிவிட்டோம் என்று கூறுகிறது. ஜிஎஸ்டியை திறம்படச் செயல்படுத்துவதில் பாஜக தோற்றுவிட்டது.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018