மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

கல்லூரி சுற்றுலா: 33பேர் பலி!

கல்லூரி சுற்றுலா: 33பேர் பலி!

மும்பை - கோவா தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், மாணவர்கள் உட்பட 33 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், ராய்கர்ட் மாவட்டத்தில், அம்பெனெலி என்னும் இடத்தில் உள்ள மலைப் பாதையில் இன்று (ஜூலை 28) காலை சுமார் 10.30 மணியளவில் இந்தக் கோர விபத்து நிகழ்ந்துள்ளது.

டாபோலி வேளாண் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் உட்பட 40 பேர் சதாரா மாவட்டத்தில் அமைந்துள்ள மலைப்பிரதேச சுற்றுலாத்தலமான மகாபலேஷ்வருக்கு பேருந்தில் சென்றுள்ளனர். அப்போது குறுகலான வளைவில் பேருந்து திரும்பும் போது பேருந்து ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து, பேருந்து சுமார் 200அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 33 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த ஒருவர் மேலே வந்து தகவல் தெரிவித்த பிறகே பேருந்து விபத்துக்குள்ளானது தெரியவந்திருக்கிறது.

இதனைத்தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அப்பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்தவர்களை அப்பகுதி மக்களே மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

இந்த விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உள்ளிட்டோர் ட்விட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018