மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

முதல்வரிடம் மண்டியிட்டு ஆசிபெற்ற காவலர்!

முதல்வரிடம் மண்டியிட்டு ஆசிபெற்ற காவலர்!

உத்தரப் பிரதேசத்தில் சீருடை அணிந்தபடி முதல்வர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற காவல் துறை அதிகாரியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குரு பூர்ணிமாவை முன்னிட்டு உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூரில் உள்ள கோரக்நாத் கோயிலில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேற்று (ஜூலை 27) சிறப்பு வழிபாடு நடத்தினார். அப்போது அங்கு வந்த பிரவீன் குமார் சிங் என்ற காவல்துறை அதிகாரி இரு கைகளையும் குவித்து, மண்டியிட்டு முதல்வரிடம் ஆசி பெற்றார்.

பின்னர் முதல்வருக்கு நெற்றியில் திலகமிட்டதுடன், அவருக்கு மாலை அணிவித்து மரியாதையும் செய்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அந்த அதிகாரியே முகநூலில் பதிவிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சீருடை அணிந்த படி முதல்வர் முன்பு மண்டியிட்டதற்கு எதிராகக் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

சீருடையில் மண்டியிடுவதற்கு முதல்வர் ஏன் அனுமதித்தார்.ஒரு காவல்துறை உயர் அதிகாரி, காவல்துறை சீருடையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடலாமா? என்ற கேள்விகள் சமூக வலைத்தளங்களில் எழுப்பப்பட்டுள்ளது.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018