மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

உண்மையான துப்பாக்கி : நிரூபிப்பதற்காக துப்பாக்கிச் சூடு!

உண்மையான துப்பாக்கி : நிரூபிப்பதற்காக துப்பாக்கிச் சூடு!

துப்பாக்கி உண்மையா அல்லது பொம்மையா என கேட்ட பெண்ணை, வாலிபர் ஒருவர் டெல்லியில் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த புதன்கிழமை அன்று பவான் மற்றும் சன்னி ஆகிய இருவர் டெல்லியில் உள்ள ஒரு துணிக்கடைக்குச் சென்றுள்ளனர். அந்த துணிக்கடையில் வேலை பார்க்கும் பெண்ணுக்கும், பவானுக்கும் முன்னதாக தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பவானுக்கு வேறு ஒரு பெண்ணை பிடித்துபோக இந்த பெண்ணிடம் உள்ள தொடர்பை துண்டித்துள்ளார். இதனால் கோபமுற்ற அவர் பவானுக்கும் வேறு ஒரு பெண்ணுடன் உள்ள தொடர்பு குறித்து அவரது மனைவியிடம் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பவான், சன்னியுடன் தன்னை மாட்டிவிட்ட பெண் வேலைப்பார்க்கும் துணிக்கடைக்கு வந்துள்ளார். அப்போது அந்த பெண்ணை மிரட்டுவதற்காக பவான் தனது கைத்துப்பாக்கியை எடுத்துள்ளார்.

இதைப்பார்த்ததும் அங்கிருந்தவர்கள் கத்தி கூச்சலிட்டுள்ளனர். அப்போது பவான் தனது துப்பாக்கியை சன்னியிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து அங்கிருந்த பெண் ஒருவர், இந்த துப்பாக்கி உண்மையானதா இல்லை பொம்மைத் துப்பாக்கியா எனக் கேட்க, உடனே சுட்டு காண்பித்துள்ளார் சன்னி.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018