மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

சீறிப்பாய்ந்த ‘செல்லம்மா’!

சீறிப்பாய்ந்த ‘செல்லம்மா’!

தனது ஆடை குறித்து விமர்சனம் செய்த ரசிகருக்கு தடாலடி பதில் தந்துள்ளார் நடிகை ப்ரியா பவானி சங்கர்.

பிரபல டிவி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிவந்தவர் ப்ரியா பவானி சங்கர். அதன் பின்னர் விஜய் டிவிக்கு சென்ற அவர் கல்யாணம் முதல் காதல் வரை என்னும் ஒரே ஒரு சீரியல் நடித்ததிலேயே ஊர்முழுக்க பாப்புலர் ஆனார். அதன்பின்னர் அந்த டிவியில் சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார்.

அதற்குப்பிறகு, டிவியில் இருந்து சினிமாவுக்கு வருவோர் பட்டியலில் தன்னையும் இணைத்துக்கொண்ட ப்ரியா, ‘மேயாத மான்’ என்னும் படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் என்ட்ரி ஆனார். கவர்ச்சிக் குறைவான கதாபாத்திரம், டிவி மூலம் சம்பாதித்த கணக்கிலடங்கா ரசிகர்கள் மற்றும் சிறந்த நடிப்பு போன்றவையால் முதல் படமே அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது. அதையடுத்து சமீபத்தில் வெளியான கார்த்தி நடித்திருந்த ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்திலும் ‘பூம்பொழில் செல்லம்மா’ என்னும் கேரக்டரில் அவர் நடித்து இருந்தார்.

இந்நிலையில், படங்களில் இதுவரை கவர்ச்சியாக நடிக்காத ப்ரியா பவானி சங்கர், நேற்று (ஜூலை27) அவரது இன்ஸ்டகிராம் பக்கத்தில் கொஞ்சம் கவர்ச்சியான போட்டோ ஒன்றை பதிவிட்டார். இதையொட்டி ப்ரியாவுமா இப்படி என சிலர் விமர்சிக்கத் தொடங்கினர். குறிப்பாக ஒரு ரசிகர், “தங்கள்மீது பெரிய நம்பிக்கை வைத்து இதுவரை உங்களுக்கு ரசிகராக இருந்தேன். ஆனால் இப்படி ஒரு புகைப்படம் பதிவிட்டதால் இனி நான் உங்கள் ரசிகர் இல்லை” என்னும் தொனியில் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த ப்ரியா, “ரொம்ப நன்றி. இப்படியான மனிதர்களுக்கு நான் கனவுக் கன்னியாக இருக்க விரும்பவில்லை. வேறொரு நல்ல கனவுக் கன்னியை நீங்கள் தேடிப்பிடிக்க எனது வாழ்த்துகள்” என்னும் தொனியில் தடாலடியாக பதில் அளித்தார்.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018