மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

தா.பாண்டியன் மருத்துவமனையில் அனுமதி!

தா.பாண்டியன் மருத்துவமனையில் அனுமதி!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மூச்சுத் திணறல் காரணமாக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மாநிலச் செயலாளருமான தா.பாண்டியனுக்கு 85 வயதாகிறது. சிறுநீரக பிரச்னை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக சிகிச்சை எடுத்து வரும் அவர், கட்சியில் தீவிரமாக பணியாற்றி வருகிறார். நேற்று திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து கோபாலபுரம் இல்லத்திற்கு நேரில் சென்று நலம் விசாரித்தார்.“ கருணாநிதி விரைவில் நலம் பெறுவார். கருணாநிதி உயிருக்காக மன்றாடவில்லை, அவரிடம் இயற்கை போராடுகிறது” என்றும் தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் இன்று (ஜூலை 28) காலை தா.பாண்டியனுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அதன்பின்னர் தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018