மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

பரங்கிமலை ரயில் விபத்து: இழப்பீடு வழங்கிய தீர்ப்பாயம்!

பரங்கிமலை ரயில் விபத்து: இழப்பீடு வழங்கிய தீர்ப்பாயம்!

பரங்கிமலை ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 8 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க ரயில்வே இழப்பீட்டுத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து, கடந்த 24ஆம் தேதி திருமால்பூருக்கு இயக்கப்பட்ட ரயிலில் கூட்ட நெரிசலின் காரணமாக நிறைய பேர் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர். அப்போது பரங்கிமலை ரயில் நிலையத்தில் பக்கவாட்டு சுவரில் மோதியதில் ஐந்து பேர் பலியானார்கள். சிலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

பரங்கிமலை ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் நிதியளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, விசாரணை நடைபெற்றுவருகிறது.

சென்னை சேத்துப்பட்டில் இயங்கி வரும், ரயில்வே இழப்பீடு தீர்ப்பாயம், "பரங்கிமலை ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 8 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாயும் இழப்பீடாக வழங்க ரயில்வே துறைக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறதாக" கூறியுள்ளது.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018