மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

கப்திலின் மின்னல் வேக சதம்!

கப்திலின் மின்னல் வேக சதம்!

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் கவுண்டி தொடரில் நியூசிலாந்தைச் சேர்ந்த மார்டின் கப்தில், 38 பந்துகளில் மின்னல் வேகச் சதத்தை பதிவு செய்தார்.

இங்கிலாந்தின் நார்த்தாம்ப்டன் நகரில் டி20 பிளாஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் வார்செஸ்டர்ஷைர், நார்த்தம்டன்ஷைர் அணிகளுக்கிடையிலான போட்டி நேற்று (ஜூலை 27) நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய நார்த்தம்டன்ஷைர் அணி 20 ஓவரில் 187 ரன்கள் குவித்தது.

பின்னர் 188 என்ற இலக்குடன் களமிறங்கிய வார்செஸ்டர்ஷைர் அணியின் தொடக்க வீரர் மார்ட்டின் கப்தில் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடத் தொடங்கினார். இது நேரலையா? அல்லது போட்டியின் ஹைலைட்ஸா? என பார்வையாளர்களுக்கு சந்தேகம் வரும் அளவிற்கு இவரது ஆட்டம் இருந்தது. வெறும் 35 பந்துகளில் 7 சிக்ஸர், 12 பவுண்டரிகள் உட்பட 102 ரன்கள் சேர்த்து கப்தில் வெளியேறினார். இவரது அதிரடியில் நார்த்தம்டன்ஷைர் அணி 13.1 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 189 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. மற்றொரு தொடக்க வீரர் ஜோ கிளார்க் 33 பந்துகளில் 61 ரன்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018