மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

மூலதன இழப்பு: மார்க் மீது வழக்கு!

மூலதன இழப்பு: மார்க் மீது வழக்கு!

சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமான ஃபேஸ்புக் கடந்த காலத்தில் பல்வேறு மைல்கற்களைக் கடந்து வந்துள்ளது. அதேபோல பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளது. கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிகா விவகாரத்தில் தகவல் கசிவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ஃபேஸ்புக் விமர்சிக்கப்பட்டு நீதிமன்றங்களையும் சந்தித்துள்ளது. இந்நிலையில் விளம்பரங்கள், விற்பனை, பயன்பாட்டாளர்களின் வளர்ச்சி போன்றவை முதலீட்டாளர்களுக்கு திருப்திகரமாக இல்லாத காரணத்தால் ஜூலை 27ஆம் தேதியன்று நியூயார்க் பங்குச் சந்தையில் ஃபேஸ்புக் நிறுவனம் தனது பங்குகளில் 20 விழுக்காட்டை இழந்தது.

அமெரிக்க வரலாற்றிலேயே இவ்வளவு பங்குகளை இழந்த முதல் நிறுவனம் ஃபேஸ்புக்கே ஆகும். இதனால் ஃபேஸ்புக் நிறுவனம் தனது சந்தை மூலதனத்தில் 124 பில்லியன் டாலரை இழந்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் 124 பில்லியன் டாலர் என்பது ரூ.85,095 கோடியாகும். ஃபேஸ்புக் தலைமைச் செயலதிகாரியான மார்க் சக்கர்பர்க் மீதும், தலைமை நிதி அதிகாரியான டேவிட் வெனெர் மீதும் பங்குதாரரான ஜேம்ஸ் ககாரிஸ் அமெரிக்காவின் பெடரல் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளார்.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018