மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

மருத்துவக் கழிவுகள்: தொண்டு நிறுவனத்தில் குவிப்பு!

மருத்துவக் கழிவுகள்: தொண்டு நிறுவனத்தில் குவிப்பு!

தேனி மாவட்டம், குச்சனூரில் மாதா அமிர்தானந்தமயி தொண்டு நிறுவனத்திற்குச் சொந்தமான தோட்டத்தில் மருத்துவக் கழிவுகள் குவிக்கப்பட்டுள்ளது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

கேரளாவில் இருந்து கண்டெய்னர் லாரிகள் மூலம் மருத்துவக் கழிவுகள் மற்றும் கோழிக் கழிவுகள் கொண்டுவந்து சட்டவிரோதமாக தமிழகத்தில் கொட்டப்பட்டுவருகிறது. இந்தச் சட்டவிரோத செயல்களைத் தடுப்பதற்கு காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருவதாகத் தெரிவிக்கின்றனர். இருப்பினும் காவல் துறையினரின் கண்காணிப்புகளையும் மீறி மருத்துவக் கழிவுகள் கொண்டுவந்து தமிழகத்தில் சாலையோரங்களிலும், குப்பைகளிலும் கொட்டப்படுவது தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், குச்சனூரில் மாதா அமிர்தானந்தமயி தொண்டு நிறுவனத்திற்குச் சொந்தமான தோட்டத்தில் மருத்துவக் கழிவுகள் குவிக்கப்பட்டுள்ளதாகக் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இந்தத் தகவலின் அடிப்படையில், வந்த காவல் துறையினர் அங்குச் சோதனை நடத்தினர். அப்போது, காலாவதியான மாத்திரைகள், பயன்படுத்தப்பட்ட ஊசிகள், மருந்துப் பாட்டில்கள் ஆகியவை அங்குக் குவிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு வந்த ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து வளர்ச்சி அலுவலர்கள், மருத்துவக் கழிவுகளை ஆய்வு செய்தனர்.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018