மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

சிகரம் தொட்ட‘கிளிமாஞ்சாரோ’ நாயகி!

சிகரம் தொட்ட‘கிளிமாஞ்சாரோ’ நாயகி!

எவரெஸ்ட்டில் ஏறிய இந்தியாவின் இளம் பெண்மணி என்ற பட்டத்தை பெற்ற சிவாங்கி பதக், தற்போது மேலும் ஒரு சாதனையினை நிகழ்த்தியுள்ளார்.

ஹரியானா மாநிலம் ஹிசார் நகரைச் சேர்ந்த 17 வயது மாணவி சிவாங்கி பதக் மலையேறும் பயிற்சியில் தீவிர ஆர்வம் கொண்டவர். சிறு வயது முதலே அதற்காக அவர் பயிற்சி எடுத்து வந்துள்ளார்.

தற்போது, ஆப்பிரிக்காவின் மிக உயர்ந்த சிகரமான கிளிமாஞ்சாரோவில் மூன்று நாட்களில் ஏறி புதிய சாதனை படைத்துள்ளார். அவருடைய இந்த புதிய சாதனை அதிகாரபூர்வ உறுதிப்படுத்தலுக்காக காத்திருக்கும் வேளையில், நாடுமுழுவதிலும் இருந்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

இதுகுறித்து ANI செய்தியாளர்களிடம் தனது கருத்தினை தெரிவித்துள்ள சிவாங்கி...

"நான் எப்போதும் மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டு காட்சியளிக்கவே வரும்புகின்றேன். மேலும், இதுகுறித்து பேசிய சிவாங்கி, ` இந்திய கையுந்து பந்து வீராங்கனை மற்றும் இந்தியாவின் முதல் பெண் மலைஏற்றாலர் அரூனிமா சின்ஹா-வின் வீடியோகளை பார்த்த பிறகு மலை ஏறுதல் குறித்து ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தேன். இந்த வீடியோக்கள் என்னை மேலும் ஊக்கப்படுத்தியது.

என்னோட ஒவ்வொரு முயற்சிகளுக்கும் உடன் நின்று எனக்கு உறுதுணையாக இருந்தது என் பெற்றோர்கள்தான். மேலும்,பெண்கள் தங்கள் இலக்குகளை அடைய வேண்டுமென்றால், பெற்றோர்களை சமாதானப்படுத்த வேண்டும். பெற்றோர்களும் தங்கள் மகள்களை ஒவ்வொரு விதத்திலும் ஆதரிக்க வேண்டும். பெண்கள் செய்ய முடியாதது என்று எதுவும் இல்லை” என்று அவர் கூறினார்.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018