மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

குடும்பத்தினரோடு ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை!

குடும்பத்தினரோடு ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை!

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை பற்றி இன்று குடும்பத்தினரிடம் மீண்டும் தீவிர ஆலோசனை செய்திருக்கிறார் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.

நேற்று இரவு கருணாநிதி உடல்நிலை சீராக இருப்பதாக அறிந்தவுடன் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட குடும்பத்தினர் தத்தமது இல்லங்களுக்குச் சென்றனர். இந்நிலையில் இரவு 11.45க்கு கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் குறைந்துகொண்டே வருவதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

கனிமொழிக்குத் தகவல் சொல்லப்பட்டதும் பதறிக்கொண்டே வீட்டு வாசலுக்கு வந்தார். அப்போதுதான் அவரது கார் டிரைவர் சென்றிருந்தார். டிரைவர் இல்லாததால் சட்டென யோசித்த கனிமொழி வெளியே வந்து, பாதுகாப்புக்காக நின்ற ஒரு போலீஸ்காரரிடம், ‘என்னை தலைவர் வீட்டில கொண்டுபோய் விடுங்க’ என்று கேட்டு அந்த போலீஸ்காரரின் டூவீலரில் பின்னால் அமர்ந்து கோபாலபுரத்தை அடைந்தார்.

இரவு 1.30க்கு காவேரி மருத்துவமனையில் மீண்டும் அட்மிட் செய்யப்பட்ட கருணாநிதியின் உடல் நலம் இப்போது எப்படி இருக்கிறது என்று காவேரி வட்டாரத்தில் விசாரித்தோம்.

“ரத்தத்தில் உள்ள மினரல்கள் குறைந்துவருவதால் ரத்த அழுத்தம் வெகுவாகக் குறைந்தது. அதிகாலை முதல் சிகிச்சை அளிக்கப்பட்டதில் ரத்த அழுத்தம் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. அதேநேரம், கல்லீரல் உள்ளிட்ட முக்கிய பாகங்களின் செயல்பாடு குறைந்துகொண்டிருக்கிறது. மூளைச் செல்களும் செயலிழந்திருப்பதால் நினைவு தப்பிய நிலையில்தான் இருக்கிறார் கருணாநிதி” என்கிறார்கள்.

இன்று காலை ஸ்டாலின் காவேரி மருத்துவமனையிலேயே குடும்பத்தினர் அனைவரோடும் மீண்டும் ஆலோசனை நடத்தியிருக்கிறார் ஸ்டாலின். இந்த ஆலோசனையில் பல முக்கிய விஷயங்கள் பற்றிp பேசியிருக்கிறார் என்கிறார்கள். இந்த ஆலோசனையில் கட்சியின் சீனியர்களும் இருக்கிறார்கள்.

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018