மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

நெல் சாகுபடியைக் குறைத்த மழை!

நெல் சாகுபடியைக் குறைத்த மழை!

மந்தமான மழைப் பொழிவால் இந்த ஆண்டு காரிஃப் பருவத்தில் நெல் சாகுபடி குறைந்துள்ளது.

இதுகுறித்து வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தப் பருவத்தில் நாட்டின் நெல் சாகுபடி பரப்பளவு 28 லட்சம் ஹெக்டேர்களாகக் குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டு இப்பருவத்தில் செய்யப்பட்டிருந்த சாகுபடியைக் காட்டிலும் 12 விழுக்காடு குறைவாகும். ஒட்டுமொத்தமாக இந்த காரிஃப் பருவத்தில் 738 லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 7 விழுக்காடு சரிவாகும். கடந்த ஆண்டு இதே காலத்தில் மொத்தம் 798 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டிருந்தது’ என்று கூறப்பட்டுள்ளது.

கிழக்கு மாநிலங்கள் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் மழைப் பொழிவு குறைந்துள்ளதே சாகுபடி சரிவுக்கு முக்கியக் காரணமாக உள்ளது. பீகார் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் கடந்த ஆண்டு இதே காலம் வரையில் செய்திருந்த நெல் சாகுபடியைக் காட்டிலும், இந்த ஆண்டு செய்யப்பட்டுள்ள சாகுபடியின் அளவானது 50 விழுக்காடு குறைவாக உள்ளது. மேற்கு வங்கத்தில் 40 விழுக்காடு குறைவாகவும், உத்தரப் பிரதேசத்தில் 20 விழுக்காடு குறைவாகவும் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018