மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்!

நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்!

இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மாற்றாக, தேசிய மருத்துவ ஆணையம் உருவாக்கப்படுவதை எதிர்த்து, நாடு முழுவதும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் இன்று (ஜூலை 28) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேசிய மருத்துவ ஆணையம்

இந்தியாவில் 1956ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்திய மருத்துவ கவுன்சிலில் ஜனநாயக முறையில் தேர்தெடுக்கப்பட்ட மருத்துவப் பிரதிநிதிகள் இருந்துவந்துள்ளனர். மேலும் இந்தக் கவுன்சிலில் மாநில அரசுகளால் நியமிக்கப்பட்ட முதன்மை மருத்துவர்களும் இடம்பெற்றிருந்தனர்.

இந்திய மருத்துவ கவுன்சிலில் தொடர்ந்து பல்வேறு வகை ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருவதால், தேசிய மருத்துவ ஆணையம் எனும் பெயரில் புதிய அமைப்பை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்து, கடந்த ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதியன்று இதுதொடர்பான மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்தியா முழுவதும் உள்ள மருத்துவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், மத்திய அரசு தேசிய மருத்துவ ஆணைய மசோதாவைப் பாராளுமன்ற நிலைக்குழுக்கு அனுப்பிவைத்தது. இந்த மசோதாவில் ஓரிரு மாற்றங்கள் செய்யப்பட்டு, நிலைக்குழுவாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து, தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் மசோதாவுக்குப் பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

வேலைநிறுத்தப் போராட்டம்

தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கப்பட்டால், அலோபதி மருத்துவர்கள் மட்டுமின்றி சித்தா, ஹோமியோபதி போன்ற பிற துறை மருத்துவர்களும் உறுப்பினர்களாகச் சேர்க்கப்படுவார்கள். இந்த மசோதாவால் மாநிலத்தின் உரிமை பறிக்கப்படும். இதற்கு அலோபதி மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். நாடு முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் இன்று (ஜூலை 28) காலை 6 மணி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இந்த வேலைநிறுத்தப் போராட்டம் மாலை 6 மணி வரை நடைபெறும்.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018