மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

காதலெனும் உலக மறை!

காதலெனும் உலக மறை!

விஸ்வரூபம் 2 படத்தின் ‘சாதி மதம்’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ நேற்று (ஜூலை 27) வெளியாகியுள்ளது.

விஸ்வரூபம் 2 படத்தில் கமலின் குரலில் ‘நானாகிய நதிமூலமே’ பாடல் ஏற்கனவே வெளியாகி கவனம் பெற்றுவருகிறது. தற்போது ஆன்ட்ரியா கதாபாத்திரத்துக்கும் கமல் கதாபாத்திரத்துக்கும் இடையேயான காதலை வெளிப்படுத்துமாறு மெலடியில் ஒரு காதல் பாடலை ஜிப்ரான் உருவாக்கியுள்ளார்.

“சாதி மதம் என்னும் வியாதியைப் போக்கிட

சூத்திரம் சொல்லிடும் சாரம் இது

காதல் எனப்படும் உலக மறை இது

ஆண்டவர் தொட்டு ஆண்டி வரை ஆண்டும் மெல்ல..

ஆதலினாலே காதல் செய் கடமை போல

மையல் செய்யாமல் உய்வெதல்லாம் உய்தலோ”

எனக் காதல் ததும்பும் வரிகளைக் கமல்ஹாசனே எழுதியுள்ளார். சத்ய பிரகாஷும் ஆன்ட்ரியாவும் இணைந்து பாடியுள்ளனர். வீடியோவில் ராணுவப் பயிற்சி காட்சிகளின் புகைப்படங்கள் பின்னணியில் காட்டப்படுகின்றன. ஆன்ட்ரியாவின் காதல் பார்வைகள் அதில் துல்லியமாகப் படம் பிடிக்கப்பட்டுள்ளன.

விஸ்வரூபம் முதல் பாகம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அதன் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு அப்போதே உருவாகியது. ஆகஸ்ட் 10ஆம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில் இந்தப் பாடல் அந்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018