மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

சென்னை துணிக்கடையில் திடீர் தீ விபத்து!

சென்னை துணிக்கடையில் திடீர் தீ விபத்து!

சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் துணி கிடங்கில் நேற்று (ஜூலை 27) இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

துரைப்பாக்கம் ராஜீவ் காந்தி சாலையில் தனியாருக்குச் சொந்தமான துணி கிடங்கு உள்ளது. அங்கு நேற்று மாலை பணி முடிந்து ஊழியர்கள் பூட்டி விட்டுச் சென்றனர். இந்நிலையில் இரவு 8.45 மணியளவில் அங்கு திடீரென தீப்பிடித்தது.

குறுகிய பகுதி என்பதால் தீ மளமளவென பரவியது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த தீயணைப்பு படையினர், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமாகியதாக கூறப்படுகிறது. இதுத்தொடர்பாக, போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018