மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

துப்பாக்கிச் சூடு: பலியானவர்களின் விவரங்கள்!

துப்பாக்கிச் சூடு: பலியானவர்களின் விவரங்கள்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் விவரங்களைத் தாக்கல் செய்யச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த 100 ஆவது போராட்டத்தில், போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில், 13 பேர் பலியாகினர். இந்தப் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை, கலவரங்கள் குறித்து போலீஸ் சார்பில் மதுரை கிளையில் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இதை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை நேற்று(ஜூலை 27) நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது ஆகியோர் முன்பு வந்தது. அப்போது, மே 22 ஆம் தேதி தூத்துக்குடி பனிமயமாதா ஆலயம் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபெற்ற அனைத்து குற்றச் சம்பவங்களைக் குறிப்பிட்டுக் குற்ற எண் 191-ன் கீழ் வழக்குப் பதிந்துள்ள நிலையில் அதே சம்பவங்களுக்கு 172வழக்குகள் பதிந்தது எப்படி என மனுதாரரின் வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார். மேலும், ஒரு சம்பவத்திற்கு ஒரு வழக்கே போதுமானது என வழக்கறிஞர் கூறினார்.

இதைத் தொடர்ந்து, “தூத்துக்குடி சம்பவத்திற்கு ஒரு வழக்கே போதுமானது. ஒரு சம்பவத்திற்காக பல வழக்குப்பதிவு செய்வது உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறுவதாகும்”. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் விவரம், போலீசார் ஆயுதங்களைக் கையாள்வதற்கு முன் பின்பற்ற வேண்டிய போலீஸ் நிலையாணை மற்றும் போலீசாரின் கவாத்து பயிற்சி வழிகாட்டுதல் கையேடு ஆகியவற்றைத் தாக்கல் செய்யத் தமிழக அரசுக்கு உத்தரவிட்ட, நீதிபதிகள் இந்த வழக்கு மீதான விசாரணையை ஜூலை 30 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018