மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

வசூலில் முந்தும் ‘ஜுங்கா’!

வசூலில் முந்தும் ‘ஜுங்கா’!

தமிழ் சினிமாவில் நேற்றைய தினம் (ஜூலை 27) வழக்கம் போல ஜூங்கா, மோகினி, மிஷன் இம்பாஸிபிள் என மூன்று படங்கள் ரிலீஸ் ஆனது. ஏற்கனவே கடைக்குட்டி சிங்கம் 200க்கும் மேற்பட்ட திரைகளில் மூன்றாவது வாரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

தமிழ் சினிமா வியாபார வட்டாரம் மிகவும் எதிர்பார்த்த படம் ஜுங்கா. வழக்கமாக, விஜய் சேதுபதி நடித்த படங்களுக்கு இருக்கும் ஓபனிங் இந்த படத்திற்கும் இருந்துள்ளது.

முன்னணி நடிகர்களின் படங்கள் காலையில் சிறப்புக் காட்சியாகத் திரையிடப்படுவது வழக்கம். விஜய் சேதுபதி நடித்த படங்களில் சிறப்புக் காலைக்காட்சி திரையிடப்பட்ட முதல் படம் ஜூங்கா என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு முழுவதும் ஜுங்கா படத்திற்கு முதல் நாள் 4.50 கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது.

த்ரிஷா நடித்த ‘மோகினி’, ஜுங்கா அலையில் காணாமல் போனது என்கிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள். தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடிக்கும் குறைவாகவே அப்படம் வசூல் ஆகியுள்ளது.

மிஷன் இம்பாஸிபிள் வழக்கமான ஆங்கில பட ரசிகர்களால் பார்க்கப்பட்டது. இப்படத்தின் வசூல் பிற தமிழ் படங்களின் வசூலை பாதிக்கவில்லை.

கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா அலையில் வசூல் குறைந்தாலும் பாக்ஸ் ஆபீஸ் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

நான்கு படங்களின் முழுமையான வசூல் விபரங்கள்..

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018