மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

லாபத்தில் முன்னேறும் ரிலையன்ஸ் ஜியோ!

லாபத்தில் முன்னேறும் ரிலையன்ஸ் ஜியோ!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 20 சதவிகிதம் கூடுதல் லாபம் ஈட்டியுள்ளது.

ஏப்ரல் - ஜூன் காலாண்டு நிறைவடைந்துள்ள நிலையில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஒவ்வொன்றாகத் தங்களது வருவாய் விவரங்களை வெளியிட்டு வருகின்றன. அதன்படி இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜூலை 27ஆம் தேதி தனது காலாண்டு வருவாய் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் சென்ற ஆண்டை விட 19.9 சதவிகித உயர்வுடன் மொத்தம் ரூ.612 கோடி லாபமீட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதற்கு முந்தைய ஜனவரி - மார்ச் காலாண்டில் ரூ.510 கோடி லாபத்தை ஜியோ பெற்றிருந்தது.

ஏப்ரல் - ஜூன் காலாண்டில் ஜியோவின் மொத்த வருவாய் ரூ.8,109 கோடியாக உள்ளது. இது 2017ஆம் ஆண்டின் வருவாயை விட 14 சதவிகிதம் கூடுதலாகும். ரிலையன்ஸ் ஜியோவின் சந்தாதார்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரையில், ஜூன் 30 நிலவரப்படி மொத்தம் 21.53 கோடி வாடிக்கையாளர்கள் ஜியோ சேவையில் இணைந்துள்ளனர். இதுகுறித்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத் தலைவரான முகேஷ் அம்பானி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், “இந்தியாவில் டிஜிட்டல் புரட்சியை முன்னெடுத்துச் செல்லும் பாதையில் ஜியோ தொடர்ந்து பயணித்து வருகிறது. கடந்த 12 மாதங்களில் நாங்கள் எங்களது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியுள்ளோம். 22 மாதங்களில் 21.5 கோடி வாடிக்கையாளர்களை இணைத்த எங்களது சாதனையை உலகின் எந்தவொரு தொழில்நுட்ப நிறுவனமும் இதுவரையில் நிகழ்த்தியதில்லை” என்றார்.

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018