மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

அயனாவரம் சிறுமி வழக்கு: முதியவர் முன்ஜாமீன் மனு!

அயனாவரம் சிறுமி வழக்கு: முதியவர் முன்ஜாமீன் மனு!

சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் மதுரையைச் சேர்ந்த முதியவர் ஒருவர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். தற்போது, அவர்களை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த காமராஜ் என்ற முதியவர், இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், “மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட நான், ஓராண்டுக்கு முன்புதான் அயனாவரம் பகுதிக்கு வந்து தங்கினேன். ஏற்கனவே, குடிபோதையில் ஒரு சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிய வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கிறேன். எனவே, சந்தேகத்தின் அடிப்படையில் அயனாவரம் சிறுமி வழக்கில் நான் கைது செய்யப்படக்கூடும் என்பதால், எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்த மனு, நேற்று (ஜூலை 27) நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் யாரும் ஆஜராகவில்லை. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த மனுவில் முழுமையான விவரங்கள் ஏதும் இல்லை என்றும், சென்னை சிறுமி வழக்குடன் எவ்வாறு தொடர்பு உள்ளது என்ற விவரத்தையும் தெரிவிக்கவில்லை என்பதால் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018